இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் செயல் முறையை மாற்றியமைத்துள்ளது. பிரஷ்ஷர்களுக்கான ஆன்போர்டிங் பிராசஸ் முறையில் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடனும், முக்கியமாக மோசடிகளை தவிர்க்கவும் இனி மின்னஞ்சல் மூலம் ஆஃபர் லெட்டர்களை அனுப்பப்படாது. புதிய ஊழியர்கள் நிறுவனத்தின் உள் இணையதளத்தில் நுழைந்து தங்கள் வேலை வாய்ப்பு விவரங்களைப் பார்க்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த புதிய அணுகுமுறை பல நன்மைகளை வழங்குகிறது. முதலாவதாக, இது வேலை வாய்ப்பு மோசடி அபாயத்தை குறைக்கிறது. மோசடிகள் நிறுவனங்களைப் போலியான ஆஃபர் லெட்டர்களை அனுப்புகின்றன. அனைத்து விண்ணப்பதாரர்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு இயக்குவதன் மூலம், இன்ஃபோசிஸ் சட்டபூர்வமான ஆஃபர் லெட்டர்களை பெறுவதற்கான பாதுகாப்பான தளத்தை வழங்குகிறது.

இரண்டாவதாக, இந்த நடவடிக்கை புதிய ஊழியர்களுக்கான வரவேற்பு செயல்முறையை எளிதாக்குகிறது, உதாரணமாக போர்ட்டலில் நுழைவதன் மூலம், அவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு விவரங்களை எளிதாக அணுகலாம், மின்னஞ்சல் விநியோக பிரச்சனைகளால் ஏற்படும் தாமதங்கள் அல்லது குழப்பத்தை நீக்குகப்படுகிறது. இதேபோல் அனைத்து தரவுக்கும் அதிகாரப்பூர்வாக நேரடியாக நிறுவனத்திடம் இருந்து பெற முடியும்.
இவ்வனைத்தையும் விட, இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஒரு கூடுதல் நன்மையும் உள்ளது, ஐடி துறையில் வேலை தேடுவோர் ஒரு ஆஃபரை வைத்துக்கொண்டு பிற நிறுவனங்களில் 'விண்டோ ஷாப்பிங்' செய்வதை குறைக்க முடியும் என நம்புகிறது இன்போசிஸ் நிர்வாகம். காரணம் இத்தகைய ஆஃபர் லெட்டர்களை சக போட்டி நிறுவனத்திடம் ஷேர் செய்ய முடியாது என்பது தான் இதன் மையக்கருத்து.
இன்ஃபோசிஸ் தனது வேலைவாய்ப்பு போர்ட்டலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, வேலை தேடுவோருக்கு தங்கள் ஆஃபர் லெட்டர்களை தங்கள் லாகின் விவரங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இணைப்பின் ( https://career.infosys.com/offerValidation ) மூலம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
2024ஆம் நிதியாண்டில் மட்டும் இன்போசிஸ் நிர்வாகம் சுமார் 24 லட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பெற்றது, இதில் சுமார் 1.94 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு இண்டர்வியூ நடத்தியுள்ளது. இதில் தேர்வான 26,975 பேருக்கு ஆஃபர் லெட்டர் அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications