உலக மக்களையே இன்று ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், உலகம் முழுக்க பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அதில் சேவைத் துறையினை சேர்ந்த ஐடி துறையும் அடங்கும்.
இந்தியாவில் சுமார் 45 லட்சம் பேர் பணியாற்றி வரும் இந்த துறையில், அவ்வப்போது பணி நீக்கம் என்பது எட்டி பார்த்தாலும், இந்த முறை ஐடி துறையானது பெருத்த அடி வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 10 ஆண்டுகளில் 166% ஊழியர்கள் விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வீழ்ச்சி காணலாம்
அதிலும் கொரோனாவின் காரணமாக உலக நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐடி துறையின் தேவையும் குறையலாம். இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டின் சில காலாண்டுகளில் ஐடி துறையானது சற்று வீழ்ச்சி காணலாம் என்றும் ஒர் அறிக்கை கூறுகின்றது.
ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இதற்கிடையில் ஐடி நிறுவனங்களின் மீதான மோகம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக ஒர் அறிக்கையை சமீபத்தில் படித்தோம். ஆனால் அதெல்லாம் அப்படி இல்லை என்று நிரூபிக்கும் விதமாக இன்ஃபோசிஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 10 ஆண்டுகளில் இன்ஃபோசிஸில் அதன் ஊழியர்களின் விகிதம் 166 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருவதையே காட்டுகிறது.
மொத்தம் எத்தனை ஊழியர்கள்
எனினும் அதே நேரம் மின்சார உபயோகம் 20 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளவில் இன்ஃபோசிஸ் தற்போது சுமார் 2,42,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. அதோடு இந்த நிறுவனம் 2008 முதல் 2020 நிதியாண்டு வரை நன்னீர் நுகர்வு 63.75 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே தனி நபர் நீர் பயன்பாட்டில் 9.45 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சுத்திகரிப்பு செய்கிறது
இதற்கு முக்கிய காரணம் நிறுவனம் தற்போது தனது வளாகங்களுக்குள் உணவு மற்றும் தோட்டக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தையும், கரிமக் கழிவுகளையும் சுத்திகரிக்கிறது. இதே மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டை 2018 முதல் 91 சதவீதம் குறைத்துள்ளதாகவும் தனது 13th Annual Sustainability Report 2020 அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications