பஞ்சாப்பை சேர்ந்த ஒரு விவசாயி கேரட் தொழிலை முதன்மையாக செய்து தனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி உள்ளார். பல ஆண்டுகளாக பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த இவர்.. கேரட் விவசாயத்திற்கு மாறி தற்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை வருமான ஈட்டி தனது குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளார். இவருடைய சுவாரஸ்ய கதையை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
பஞ்சாபின் கபுர்தலாவில் உள்ள பரம்ஜித்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புமான் சிங் கவுரா. 6 உடன்பிறப்புகளோடு இளையவராக பிறந்தவர் புமான் சிங் கவுரா. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்.. தனது தந்தையும் தாத்தாவும் வயல்களில் உழைத்ததை பார்த்தே வளர்ந்தவர்.

BA இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு தனது படிப்பை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நெல் மற்றும் கோதுமை வயல்களில் வேலை செய்ய தொடங்கியுள்ளார் புமான் சிங்.
அப்போதுதான் அவருக்கு கேரட் விவசாயம் செய்வது பற்றிய யோசனை தோன்றியுள்ளது. கபுர்தலா மாவட்டத்தில் உள்ள அல்லுபூர் அதாவது பரம்ஜித்புரா என்ற இடத்தில் கேரட் சாகுபடி பிரபலமாக நடைபெற்று வந்துள்ளது.
எனவே தானும் இதே போல கேரட் சாகுபடியில் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய புமான் சிங் சிறிய நிலத்தில் காய்கறி சாகுபடி செய்து கொண்டிருந்த விவசாயியிடம் உதவியை நாடியுள்ளார். ஆனால் அந்த விவசாயியும் அவருக்கு உதவ மறுத்துள்ளார்.
இதன் காரணமாக கேரட் விவசாயத்திற்கு மாறி தனக்கென ஒரு பெயரை உருவாக்க வேண்டும் என்று புமான் முடிவெடுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக உழைத்து தற்போது 65 வயதாக இருக்கும் புமான் சிங் கடின உழைப்பு ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதை நிரூபித்துள்ளார்.
4.5 ஏக்கர் நிலத்தில் கேரட் விவசாயத்தை தொடங்கியுள்ளார் புமான். இன்று புமான் மற்றும் அவர் சகோதரர்கள் உட்பட பூமானின் குடும்பம் 80 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறது. முதன்மையாக கேரட் விவசாயத்தில் இந்த குடும்பம் கவனம் செலுத்துகிறது. கேரட்டை வளர்ப்பதற்கு அப்பால் விதைகளையும் விற்பனை செய்கின்றனர்.
சிறுவயதில் புமான் சிங்கிற்கு பெரிய லட்சியங்கள் மற்றும் கனவுகள் இருந்துள்ளன. உயர் கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்லவும் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் வறுமையின் காரணமாக அவருடைய கனவுகளை குறைத்துக் கொண்டு கேரட் விவசாயத்தில் இறங்கியுள்ளார். 1993-ஆம் ஆண்டு முதல் தனது கேரட் விவசாய பயணத்தை தொடங்கியுள்ளார்.
கேரட் விவசாயம் செய்வதற்காக புத்தகங்களைப் படித்தும் அருகில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்திற்குச் சென்றும் கேரட் விவசாயத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தை பற்றியும் தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் தனது குடும்பத்தின் 4.5 ஏக்கர் நிலத்திலும் தைரியமாக கேரட் விதைகளை விதைத்துள்ளார். அவருடைய சோதனை வெற்றிகரமாக நல்ல விளைச்சலை தந்துள்ளது.
ஆரம்பத்தில் கேரட் விதைகளை கைமுறையாக விதைத்துள்ளனர். அதன் பிறகு படிப்படியாக இயந்திரங்களை வைத்து விதைக்க தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் பயிரிடப்பட்ட கேரட்களை சந்தைக்குச் சென்று தான் விற்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் புமானின் தோட்டத்தில் விளைந்த கேரட் வகைகள் தரமானதாகவும் சுவையானதாகவும் பெயர் பெற்றதால் விற்பனையாளர்கள் இவர்களுடைய பண்ணைக்கே வந்து கேரட்டை வாங்க தொடங்கியுள்ளனர். புமான் சிங் கடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக கேரட்களை பயிரிட்டு வருகிறார்.
தற்போது புமான் சிங் கேரட் விதைகளை 1000 முதல் 1500 ரூபாய் வரை கிலோவுக்கு விற்பனை செய்கிறார். இதனை மாவட்டத்தில் உள்ள பலரும் வாங்கிச் செல்கின்றனர். முதன்முதலாக கேரட் விவசாயத்தில் இறங்கும்போது 4.5 ஏக்கர் நிலத்தை மட்டுமே வைத்திருந்த அவரது குடும்பம்.. இன்று மொத்தமாக 80 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளது.
அதில் 37 ஏக்கர் நிலம் புமான் சிங்குக்கு சொந்தமானது. இதில் மொத்தம் 50 ஏக்கர் நிலத்தில் கேரட் பயிரிடப்படுகிறது. கேரட் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை விதைக்கப்பட்டு 90 முதல் 100 நாட்களுக்குப் பிறகு அறுவடைக்கு தயாராகிறது.
ஒரு ஏக்கருக்கு குறைந்தது 110 குவிண்டால் கேரட்களை அறுவடை செய்கிறோம். கேரட் தவிர செப்டம்பர் செப்டம்பரில் அறுவடை செய்யப்படும் நெல் மற்றும் மக்காச்சோளத்தையும் புமான் சிங்கின் குடும்பம் பயிரிடுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி வரை வருமானம் ஈட்டுவதாக புமான் சிங் கூறியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications