நீங்கள் ஒரு சினிமா பிரியராக இருந்தால் நிச்சயம் ஐநாக்ஸ்-ஐ தெரியாமல் இருக்காது. ஐநாக்ஸ்-ஐ தெரியாமல் நீங்கள் சினிமா பிரியராக இருப்பதும் கடினம். அந்தளவுக்கு மிகப்பெரிய சினிமா திரையரங்குகளை கொண்டுள்ளது.
இது ஒரு பொழுதுபோக்கு சம்பந்தமான நிறுவனமாகும். இது நாடு முழுவதும் திரையரங்குகளை கொண்ட ஒரு நிறுவனமாகும்.
தொடர்ந்து இந்தியா முழுவதும் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் ஐநாக்ஸ், கொரோனா காலத்தில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்த சமயத்தில் நிலவிய நெருக்கடியான நிலையை சமாளிக்க பெரும் மாற்றம் தேவைப்பட்டது.
இணைப்பு திட்டம்
அதன் காரணமாக இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய தியேட்டர் ஜாம்பவான் ஆன பி வி ஆர் உடன் இணைக்க முடிவு செய்தது. இதன் மூலம் வருவாயை மேம்படுத்துவதுடன், விரிவாக்கத்தினையும் விரைவில் அதிகளவில் செய்ய முடியும் என இருபெரும் ஜாம்பவான்களும் திட்டமிட்டன.
உணவு வணிகம்
இதற்கிடையில் கொரோனாவுக்கு பிறகு திறக்கப்பட்ட தியேட்டர்கள் பற்பல கட்டுப்பாடுகளுடன் செயல்பட தொடங்கின. எனினும் மக்கள் மத்தியிலான ஆர்வம் என்பது அதிகரித்துள்ளது எனலாம். ஐநாக்ஸ்-ஐ பொறுத்த வரையில் அதன் சினிமா என்பது முதல் கட்ட வணிகமாக இருந்தாலும், அது உணவு வணிகத்திலும் ஈடுபட்டு வருகின்றது.
இந்தியர்களுக்கு பிடித்தமான உணவு +சினிமா
சினிமா என்பது பல நாடுகளில் மக்களால் விரும்பப்படும் ஒன்றாக இருந்தாலும், இந்தியாவினை பொறுத்தவரையில் சினிமா மற்றும் உணவு என்பதும் மக்களுக்கு பிடித்தமான ஒன்று. இதனை சரியாக புரிந்து கொண்ட ஐநாக்ஸ், இரண்டையும் ஒரே சேர வணிகமாக்கி கொண்டுள்ளது.
இவ்வளவு விற்பனையா?
ஐநாக்ஸ் லெய்சர் நடப்பு ஆண்டில் 863 டன்கள் பாப்கார்ன் மற்றும் 19.38 லட்சம் சமோசாக்கள், 82 டன்கள் பிரைஸ் என பலவற்றையும் விற்பனை செய்துள்ளது.
இது குறித்து சினிமா உணவு அறிக்கை 2022 என்ற ஆய்வில், இந்திய சினிமாக்களின் போது என்ன அதிகளவில் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள், என்ற ஆய்வினை மேற்கொண்டது. இது ஐநாக்ஸ்-ல் 70 மில்லியன் இந்திய சினிமா பார்வையாளர்களின் உணவு தேர்வினை குறித்து அறிவித்தது.
மொறுமொறுப்பான ஸ்னாக்ஸ் மீதான காதல்
பெங்களூரு தொழில் நுட்ப வல்லுனர்கள் மொறு மொறு என இருக்கும் சிப்ஸ்கள் உள்ளிட்டவற்றை அதிகம் விரும்புகின்றனராம். இந்தியாவில் ஐநாக்ஸில் விற்பனை செய்யப்பட்ட மொறு மொறு என இருக்கும் சிப்ஸ்களில் 11.25% பெங்களூரில் தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே சென்னை, மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 55% விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் மொத்தம் 3,38,859 பப்ஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன
டீ, காபி, ஜுஸ்
இந்த ஆண்டில் மட்டும் 38.15 லிட்டர் கோக் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே ஒரு வருடத்தில் 20.28 லட்சம் கப் டீ மற்றும் காபியை சினிமா விரும்பிகள் குடித்துள்ளனராம்.
சாண்ட்விச் மற்றும் பர்கர்
ஐநாக்ஸில் நடப்பு ஆண்டில் 5,16,958 சாண்ட்விச்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2,86,621 பர்கர்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. . குறிப்பாக மதுரை மற்றும் சேலம் நகரங்கள் டாப் 10 சாண்ட்விச் நுகர்வில் இடம்பிடித்துள்ளனவாம். இதே லக்னோ, குருகிராம், புனே மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்கள் கூட அடுத்தடுத்த இடங்களில் தான் உள்ளனர். இதே மும்பை மற்றும் குருகிராம் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்டவை அதிக பர்களை சாப்பிட்ட நகரங்களில் ஒன்றாகும்.
சைனீஸ் உணவுகள்
சீனா உனவுகளும் இந்தியர்களுக்கு அதிகம் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருந்து வருகின்றனவாம். நடப்பு ஆண்டில் 10.96 லட்சம் திம் சம் மற்றும் 40,000 நூடுல்ஸ் மற்றும் ஃபிரைடு ரைஸ் உள்ளிட்ட உணவுகளை வழங்கியது. 2.21 லட்சம் மோமோஸ் உடன் கொல்கத்தா முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து டெல்லியில் 79,436 பீஸ்களுடன் உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications