இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின், இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் திருமண விழாவில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விருந்தினர்களின் நுழைவை கட்டுப்படுத்த QR கோட் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. திருமணத்தில் இன்னும் வேறு என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தது என்பது குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஜூலை 12-ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த திருமண விழாவில், பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 13-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திருமணம் நடைபெற்றது. ஜூலை 14-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஊழியர்கள் மற்றும் பிசினஸ் பார்ட்னர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: திருமண விழா அரங்கத்திற்குள் நுழைவதற்கு விருந்தினர்களின் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்ட QR குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி உள்ளே நுழைவதற்கு கையில் அணிந்துகொள்ள பேண்டும் வழங்கப்பட்டது. அவசர கால சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு வழிமுறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.
விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள்: திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் பல்வேறு வடிவமைப்புகளில் வழங்கப்பட்டன. அவற்றுள் சிறப்பு அம்சமாக, வெள்ளி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சிறு கோவில் போன்ற அமைப்பில் வழங்கப்பட்ட பத்திரிகை தான்.
திருமணத்தின் வெவ்வேறு நிகழ்வுகளுக்கான தனித்தனி அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் "AR" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட துணி, நீல நிற ஷால் மற்றும் வெள்ளிப் பெட்டி போன்றவை அடங்கும்.
மேலும் விருந்தினர்கள் உள் நுழைவதற்கு கூகுள் படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. அதன் பின் படிவத்தை நிரப்பிய அனைவருக்கும் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளனர். அந்த மெசேஜ்ஜில் நிகழ்ச்சிக்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக உங்களுக்கு QR குறியீடுகள் அனுப்பப்படும் என்று எழுதியிருந்தது. இந்த QR குறியீடுகளை பயன்படுத்தி தான் பல பிரபலங்களும் உள் நுழையும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.
இந்த QR குறியீடுகள், மெயில் வழியாக பிரபலங்களுக்கு அனுப்பப்பட்டன. அனுமதி வழங்கப்படும் நுழைவாயிலில் இந்த QR குறியீடுகள் ஸ்கேன் செய்யப்பட்டது. ஒவ்வொரு விருந்தினரும் தங்கள் மணிக்கட்டில் ஒரு பேண்டை அணிந்துகொள்ள வேண்டும்.
திருமண நாளில், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ ஜே-யோங் மற்றும் அவரது மனைவி ஆகியோர், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிபர்கள், திருமண விழாவின் போது பிங்க் நிற பேண்டை அணிந்திருந்தனர்.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் உள்ள அவர்களது இல்லமான ஆண்டிலியாவில், தங்கள் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு திருமண விழாவைத் தொடங்கினர்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இருந்தது. பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் கிம் கர்தாஷியன் மற்றும் WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications