Astronomer நிறுவனம் என்பது ஒரு தரவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களின் தரவுகளை எளிமையாகவும் நம்பிக்கையுடன் நிர்வகிக்க இந்நிறுவனம் உதவுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக Andy Byron, என்பவர் கடந்த 2023 ஜூலை மாதம் முதல் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர், பொறுப்பேற்றப் பிறகுதான், இந்நிறுவனம் விரைவாக வளர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது.
Astronomer நிறுவனம் தற்போது Apache Airflow எனப்படும் திறந்த மூல தொழில்நுட்பத்தை நம்பிக்கையுடன் நிர்வகிக்கக்கூடிய ஒரு சிறந்த தளமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், சுயமாக நிர்வகிக்கப்படும் பரிந்துரைகளுடன் ஒப்பிடுகையில், இந்த சிறுவனத்தின் சேவைகள் 70% உயர்ந்த செயல்பாடு கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, நாம் பெரிய அளவிலான தரவுகளை தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்றால், இதையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும். இதற்காகத்தான் Apache Airflow பயன்படுகிறது. இவை சிக்கலான வேலையாக இருப்பதால், இதைச் சுலபமாக செய்யவே Astronomer உதவுகிறது.

இன்னும் புரியும்படி சொன்னால், நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். புதிய தகவல்களை பெற வேண்டியிருக்கும். அதே சமயம், பழைய தரவுகளை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். இவை எல்லாம் தானாக நடைபெறும் வேலைகள். ஆனால், இவையெல்லாம் நடப்பது Apache Airflow மூலமாகத்தான். இதை எளிமையாக்கவே Astronomer platform பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், Astronomer நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக Andy Byron பதவியேற்பதற்கு முன்பு, அவர் பல தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர், கடந்த காலங்களில் Lacework, Cybereason, Fuze, BMC Software, Blade Logic, Veri Center போன்ற நிறுவனங்களில் உயரதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த அனுபவமே தற்போது அவரை Astronomer நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக பதவியில் அமர்த்தியுள்ளது.
Cybereason நிறுவனத்தில் பணியாற்றிய போது, அங்கு Chief Revenue Officer (CRO) என்ற உயர் பதவியில் பணியாற்றி வந்தார். அந்தப் பொறுப்பில், அவர் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை மற்றும் கூட்டாண்மை அணிகளை நேரடியாக வழி நடத்தி வந்துள்ளார். அவரது தலைமையில், Cybereason நிறுவனம் சந்தையில் உலகளாவிய வகைப்படுத்தலில் இடம் பெற்றது. மேலும், அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் வெறும் 5 மில்லியனில் இருந்து 70 மில்லியனைத் தாண்டியது. அதேபோல், அந்நிறுவனத்தின் மதிப்பீடு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு உயர்ந்தது.
சி.இ.ஓ. Andy Byron, மேகன் கெர்ரிகன் பைரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பைரனின் மனைவி தற்போது Bancroft School என்ற கல்வி நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினர் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
Andy Byron, சமீபத்தில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு கோல்ட் பிளே கான்சர்ட் நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தின் காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர், தன் நிறுவனத்தில் தலைமை மக்கள் அதிகாரியாக பணியாற்றும் Kristin Cabot உடன் இருந்தபோது, அவர்கள் இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருப்பது "கிஸ் கேம்" மூலம் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இந்தக் காட்சியை பார்த்ததும் இருவரின் முகத்திலும் பயம் தெரிந்தது. இதனால், தங்களை இருவரும் மாறி மாறி மறைத்துக் கொள்ள முயன்றனர்.
அப்போது முன்னணி பாடகர் கிறிஸ் மார்ட்டின், இதைப் பார்த்து மேடையில், "ஓ..! இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா..? வெட்கப்படுகிறார்கள்.." என்று கூறினார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர், Andy Byron-ன் மனைவிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். சிலர், பொது வெளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications