பங்குச்சந்தை முறைகேடுகள் பல விதமாக நடந்து வரும் வேளையில், தற்போது அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை அளிப்பதைத் தாண்டி வொர்க் ப்ரம் ஹோம்-ன் பிரச்சனையை உணர்த்துகிறது.
அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, அவரது நண்பர்களுடனான உரையாடல்களை ரகசியமாக ஒட்டுக்கேட்டு, இத்தகவல்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பங்குகளை வாங்கியுள்ளார்.

இந்த பங்கு வர்த்தகம் மூலம் கிட்டத்தட்ட 2 மில்லியன் டாலர் அதாவது 17 கோடி ரூபாய் பணம் சம்பாதித்ததாக அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் (SEC) தெரிவித்துள்ளது. என்ன நடந்தது..? வாங்க முழுசா பார்ப்போம்..?
டைலர் லௌடோன் (Tyler Loudon) என்பவர், தனது மனைவியின் போன் கால்-ஐ ஒட்டுக்கேட்டது முதல் மாதக் கணக்கில் TravelCenters of America Inc என்னும் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியுள்ளார்.
இதன் பின்னர், 2023 பிப்ரவரியில், BP நிறுவனம் TravelCenters of America நிறுவனத்தை 74% அதிக விலைக்கு வாங்கவுள்ளதாக அறிவித்த போது, லௌடோன் தனது பங்குகளை விற்பனை செய்தது மூலம் 1.76 மில்லியன் டாலர் அதாவது 14.8 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளார்.
இதற்கிடையில், லௌடோன் மனைவி, BP நிறுவனத்தின் இணைப்புகள் மற்றும் கையகப்படுதல் பிரிவின் மேலாளராக இருந்தது தான் குறிப்பிடத்தக்கது. அவர் இந்த கையகப்படுத்துதல் ஒப்பந்தத்தில் பணியாற்றி வந்தது தகவல் கசிவுக்கான முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் SEC, தனது கணவர் பங்கு வர்த்தகம் செய்த விஷயம் அவருக்குத் தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. SEC என்பது அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகும்.
SEC மற்றும் டெக்சாஸ் வழக்கறிஞர்களின் நீதிமன்ற வாதங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, லௌடோன் தனது மனைவி வீட்டிலிருந்து 20 அடி தூரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி கேட்டுக்கொண்டு, TravelCenters பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளார்.
இறுதியில், அவர் தனது மனைவியிடம் தனது செயலை ஒப்புக்கொண்டபோது, அவள் வீட்டை விட்டு வெளியேறி, விவாகரத்து கோரியது அடுத்த பெரும் அதிர்ச்சி சம்பவம். மேலும், அவள் லௌடோனின் வர்த்தகத்தை BP நிறுவனத்திற்கு முறையாகப் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து BP விசாரணை நடத்தியதில், லௌடோன் தனது மனைவி தகவலைக் கசிவு செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கண்டறிந்தது. ஆனாலும், BP நிறுவனம் லௌடோனின் மனைவியை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் தண்டனையின் ஒரு பகுதியாக, லௌடோன் தான் சம்பாதித்த பணத்தைத் திருப்பித் தருவதற்கும் அபராதம் செலுத்துவதற்கும் ஒப்புக் கொண்டார்.
TravelCenters of America Inc. நிறுவனத்தை சுமார் 1.3 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்காக, பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் BP நிறுவனத்திற்கு அமெரிக்க பெட்ரோல் நிலையங்களின் வலையமைப்புக்குள் நுழைய வாய்ப்பு உருவானது. TravelCenters நிறுவனம் அமெரிக்காவின் 44 மாநிலங்களில் சுமார் 281 இடங்களில் பெட்ரோல் பப்களை கொண்டிருந்தது.
கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்தில் வீட்டிலிருந்து பணிபுரியும் நிலை தொடங்கியதிலிருந்து, SEC ஆனது குறிப்பிடத்தக்க வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது கேட்ட அல்லது பார்த்த தகவல்களைக் கொண்ட பல உள்-வர்த்தக வழக்குகளை (insider-trading cases) கொண்டு வந்துள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications