இந்தியாவில் உணவு பொருட்கள் சார்ந்த தொழில்கள் எப்போதுமே லாபத்தை தருபவை தான். குறிப்பாக ஸ்னேக்ஸ், சாட் கார்னர்களுக்கு மவுசு அதிகம்.
ருசியான உணவு பரிமாறினால் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதோடு புது புது வாடிக்கையாளர்களையும் ஈர்க்க முடியும். அப்படி தஹி பல்லா விற்பனை செய்து கோடீஸ்வரரான உழைப்பாளியின் கதை தான் இது.

ருசியான தஹி பல்லா தரும் சர்மா ஜி: டெல்லி நேரு பிளேஸ் பகுதிக்கு செல்பவர்கள் யாரும் சர்மாஜியின் கடையில் தஹி பல்லா உண்ணாமல் வரமாட்டார்கள். இவர் கடையில் தஹி பல்லா உண்பதற்காகவே நேரு பிளேஸுக்கு படை எடுப்பவர்களும் உண்டு.
இவர் பரிமாறும் தஹி பல்லா தனிச்சுவை கொண்டது என்பதால் எப்போதுமே இவர் கடையில் கூட்டமாகவே இருக்கும். தஹி பல்லா என்பது உளுந்து வடை செய்து அதனை தயிரில் சேர்த்து சட்னி உள்ளிட்டவற்றை கலந்து பரிமாறும் ஒரு வகையான சாட். வட இந்தியாவில் இது பிரபலமான உணவு.
சிறிய முதலீடு பெரிய லாபம்: முகேஷ் குமார் சர்மா கடந்த 1989ஆம் ஆண்டு முதன்முறையாக டெல்லி நேரு பிளேஸில் கடை வைத்து தஹி பல்லா விற்பனை செய்ய தொடங்கினார். அப்போது ஒரு பிளேட் தஹி பல்லா வெறும் 2 ரூபாய் தான். இப்போது அது 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவர் கடையை வாடகைக்கு எடுக்கவில்லை மாறாக, ஒரு வண்டியில் சில மேசைகளை கொண்டு வருவார், வழக்கமான இடத்தில் மேசைகளை போட்டு கடை அமைப்பார். வீட்டில் தயாரித்து கொண்டு வந்த வடை, தயிர் மற்றும் மசாலா பொருட்களை மேசை மீது வைத்து கலந்து விற்பனை செய்வார்.
பின்னர் வண்டியிலேயே அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு வீடு திரும்புவார். சிறிய முதலீடும் கடின உழைப்பும் இவருக்கு பெரும் பலனை தேடி தந்துள்ளது.
கோடீஸ்வரரான சர்மா: தஹி பல்லாவை விற்பனை செய்தே கோடீஸ்வரர் ஆகிவிட்டார் சர்மா. இவர் சொந்தமாக BMW கார் கூட வைத்திருக்கிறார். சில சமயம் இவர் BMW காரில் வந்து கடை அமைத்து தஹி பல்லா விற்பனை செய்கிறார். எனவே இவரது அடையாளமே கோடீஸ்வரர் சர்மா ஜி என மாறிவிட்டது. குரோர்பதி பல்லாவாலே, BMW சர்மா ஜி என புது புது அடையாளங்கள் கிடைத்துள்ளன.
வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்: சர்மாஜியின் சாட் கடையில் கிடைக்கும் தஹி பல்லாவுக்கு தனி ருசி உண்டு என கூறும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் கூட காத்திருந்து வாங்கி செல்கின்றனர். இதற்கு காரணம் அவர் தயார் செய்யும் மசாலா பொருட்கள்.
இது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அவர் ரகசியமாகவே வைத்திருக்கிறார். என்ன தான் பெரிய பெரிய கடைகள் வந்தாலும் இந்த ருசி கிடைப்பதில்லை என கூறும் வாடிக்கையாளர்கள் கோடீஸ்வரர் ஆனாலும் சர்மா ஜி வழக்கம் போல வந்து சாதாரணமாக கடை போடுவது வியப்பாக உள்ளது என்கின்றனர்.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications