ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் முதல் உலகின் பிரபலமான நபர்களும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்து தங்களது போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தளவுக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாவை இன்றைய டிஜிட்டல் உலகம் உருமாற்றிவிட்டது.
பில்லியன் யூஸர்களுக்கு மேல் உள்ள இன்ஸ்டாகிராம் யூஸர்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள இந்த பிளாட்பாரத்தை நன்றாகவே பயன்படுத்தி வருகின்றனர். போட்டோ மட்டுமல்லாமல் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமுக்காக எடுப்பதற்கு சிறந்த இடங்களைத் தேடித்தேடிச் சென்று படங்களை எடுத்து பகிரந்து வருகின்றனர்.

இதனால் பல புதுமையான விஷயங்களையும் கண்கவர் இடங்களையும் இன்ஸ்டாகிராமில் பார்த்து ரசிக்க முடிகிறது. இதுமட்டும் அல்லாமல் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகப்படியான பாலோவர்களையும், லைக்குகளையும் பெற Most Instagrammable Places என பட்டியலிடப்பட்ட இடங்களுக்கு செல்வதும் இப்போது இன்ப்ளூயென்சர்-களுக்கு வாடிக்கையாகிவிட்டது. க்-களை அள்ள செம ஐடியா.. உலக
இப்படி பல தரப்பினர் இன்ஸ்டாகிராம்-ல் பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காகவே போட்டோ எடுக்க விரும்பிச் சென்ற இடங்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
சான்டோரினி, கிரீஸ் (Santorini, Greece) : கிரேக்க நாட்டில் உள்ளது இந்த சான்டோரினி தீவு நகரம். அங்கு கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்துமே பளிச்சென்று மாசு மருவற்ற வெண்மையான நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். ஏஜியன் கடலில் அமைந்துள்ள இந்த சான்டோரினி தீவில் இருந்து கடற்கரையை பார்க்கும்போது மிகவும் ரம்மியமாக இருக்கும்.
அந்த நகரத்தில் உள்ள சர்ச்கள் அனைத்தும் பிரகாசமான புளூ நிற டோம்களைக் கொண்டிருக்கும். எழில் கொஞ்சும் வண்ணம் அமைந்திருக்கும். தெருக்கள் அனைத்தும் காபிள் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். சான்டோரினி நகரம் உண்மையிலேயே புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு கனவு நகரமாகும்.
பாலி, இந்தோனேஷியா (Bali, Indonesia) : இன்ஸ்டாகிராம் படங்கள், விடியோக்கள் எடுப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம் இந்தோனேஷியாவில் உள்ள பாலி. பசுமையான நெல்வேலிகளும், பிரமிக்க வைக்கும் அருவிகளும், அழகிய கடற்கரைகளும் நிறைந்திருக்கும். இன்ஸ்டாகிராம் பிரியர்களுக்கு ஏற்ற இடம் இது.
பாரீஸ், பிரான்ஸ் (Paris, France) : பாரீஸ் என்றாலே காதலர்களின் சொர்க்கபுரி என்றுதான் சொல்வார்கள். அங்குள்ள மிகப் பிரமாண்டமான ஐபில் டவர், லூவர் மியூசியம், மான்மார்ட்ரே நகரின் நேர்த்தியான தெருக்கள் எல்லாமே பார்ப்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளும் விஷயங்களாகும். இவை தவிர இன்னும் ஏராளமான போட்டோஜீனிக் இடங்கள் பாரீஸில் உள்ளன.
மர்ராகேஷ், மொரோக்கோ (Marrakech, Morocco) : மொராக்கோ நாட்டில் உள்ள மர்ராகேஷ் ஒரு வண்ணமயமான நகரமாகும். எங்கு பார்த்தாலும் பளிச்சென்ற நிறத்தில் கட்டடங்கள், அலுவலகங்கள், வீடுகள் இருக்கும். நுணுக்கமான கட்டடக்கலையை அங்குள்ள கட்டடங்களில் பார்க்கலாம்.
எப்போதும் பிஸியான மார்க்கெட்கள் நிறைந்திருக்கும். மெதினாவின் குறுகலான சந்துகளும், எழில் நிறைந்த ஜார்டின் மேஜோரெல்லே பூந்தோட்டங்களும் பார்த்தால் நாள்முழுக்க உட்கார்ந்து போட்டோக்களையும் விடியோக்களையும் என்று ஏங்க வைக்கும்.
டோக்கியோ, ஜப்பான் (Marrakech, Morocco) : ஜப்பானியத் தலைநகரான டோக்கியோவில் பாரம்பரியமும், மாடர்ன் ஆர்க்கிடெக்சரும் கலந்து கட்டிய கட்டடங்களையும் காணலாம். இது ஒரு அபூர்வமான விஷயமாகும். இன்ஸ்டாகிராமர்களுக்கு டோக்கியோவில் படம் பிடிக்க ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. நெரிசல் நிறைந்த ஷிபுயா நகரத் தெருக்கள், கியாடோ நகரின் அமைதியான பூங்காக்கள் என எல்லாத் தரப்பினரும் ரசிக்கத்தக்க எத்தனையோ விஷயங்களை டோக்கியோ தன்னகத்தே கொண்டிருக்கிறது.
இந்த ஐந்து இடங்கள் வெறும் உதாரணத்துக்காக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு சீசண்டு டிராவலர் என்றாலோ அல்லது சிறந்த போட்டோகிராபராக வேண்டும் என்று நினைப்பவர் என்றாலோ இந்த இடங்களுக்குச் சென்றால் நிச்சயமாக உங்களது இன்ஸ்டாகிராமில் பல மேஜிக்குகளை செய்யலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications