இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான Content Creators-களை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் பலரும் ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் வருமானம் பார்ப்பதை நாம் கண் கூட பார்க்கிறோம். இந்த போட்டியை தீவிரப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் ஒரு வசதியை கொண்டு வர இருக்கிறது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், தனது வீடியோ டைம் லிமிட்களை விரிவுபடுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, பாரம்பரியமாக யூடியூபில் மட்டுமே இடம்பெறும் முழு நீள பாட்காஸ்ட்கள், நேர்காணல்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல வகையான வீடியோக்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றும் வகையில் 90 நிமிடங்கள் (1.5 மணி நேரம்) வரை நீளக் கொண்ட Horizontal வீடியோக்களை சோதனை செய்து வருகிறது.Features என அழைக்கப்படும் இந்த புதிய வடிவம், பார்வைகளை நீண்ட நேரம் தக்க வைக்க இன்ஸ்டாகிராம் எடுக்கும் புதிய முயற்சி ஆகும்.

இன்ஸ்டாகிராமில் நீண்ட நேர வீடியோக்களை ஆதரிப்பதில்லை என கூறிவந்த இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தனது வியூகத்தை மாற்றி இருப்பதாக அறிவித்துள்ளார். ரீல்ஸ் மூலம் மக்கள் புதிய கன்டென்ட்டை கண்டறிந்து, இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறாமலேயே அதே தளத்தில் நீண்ட வீடியோக்களை தொடர்ந்து பார்க்கும் முறையை கொண்டு வருவதாகவும் அதன் சோதனை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே குறிப்பிட்ட கிரியேட்டர்கள் 90 நிமிடங்கள் வரை நீளமான வீடியோக்களை பதிவேற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். Clips as Reels என்ற மற்றொரு அம்சத்தின் மூலம், கிரியேட்டர்கள் நீண்ட வீடியோக்களின் சுவாரஸ்யமான பகுதிகளை மட்டும் சிறிய ரீல்ஸ்களாக மாற்றி வெளியிடலாம்.
TechCrunch தகவலின்படி, பிரேசில் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிரியேட்டர்களுடன் இந்த 'Features' சோதனை தொடங்கியுள்ளது, தற்போது அமெரிக்காவிலும் ஒரு சிறிய குழுவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்திய கிரியேட்டர்களுக்கு இந்த வசதி இப்போதைக்கு வரவில்லை ஆனால் விரைவில் வந்துவிடும்.
யூடியூப் எப்படி தகுதியான கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயில் இருந்து 55% பங்கை நேரடியாக வழங்கும் முறையை கொண்டுள்ளதோ அதே போல இன்ஸ்டாகிராமும் கொண்டு வர முயற்சி செஉகிறது அதன் தொடக்கம் தான் நீண்ட நேர வீடியோக்களை வெளியிடும் வசதி கொண்டு வரப்படுகிறது என சொல்லப்படுகிறது.
இன்ஸ்டாகிராமின் இந்த புதிய முயற்சி பரிசோதனை முயற்சியில் மட்டுமே இருப்பதால், கிரியேட்டர்கள் உடனடியாக யூடியூப்பை விட்டுவிட தேவையில்லை. ரீல்ஸ் மூலமான பார்வையாளர்களை தடையின்றி நீண்ட நேர வீடியோக்களுடன் இணைப்பதிலும், கிரியேட்டர்களை கவர்ந்திழுக்கும் ஒரு முறையான கட்டண முறையை அறிமுகப்படுத்துவதிலும் இன்ஸ்டாகிராம் வெற்றி பெற்றால் மட்டுமே அது யூடியூப்பிற்கு பெரிய போட்டியாக மாற முடியும்.
எனவே கண்டண்ட் கிரியேட்டர்களுக்கு தான் இனி கொண்டாட்டம். ஏனெனில் யூடியூப்பை போல இன்ஸ்டாவிலும் பெரிய வீடியோக்களை பதிவிட்டு வருமானம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications

