இந்தியாவின் முன்னணி குவிக் காமர்ஸ் தளமான இன்ஸ்டாமார்ட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தனது தளத்தில் மக்கள் எப்படி ஷாப்பிங் செய்தார்கள் என்பதை அறிக்கையாகை வெளியிடும், இதேபோல் 2025ஆம் ஆண்டில் மக்களின் செலவு செய்யும் போக்கு எப்படி இருந்தது என்பதை விளக்கும் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
யாரு சாமி நீ..?!
இந்த ஆண்டு இன்ஸ்டாமார்ட் தளத்தில் ஒரு வாடிக்கையாளர் ரூ.22 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளார் என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது, இந்த 22 லட்சம் ரூபாய்க்கு இந்த நபர் சுமார் 22 ஐபோன் 17 மாடல்கள், 24 கேரட் தங்க நாணயங்கள், பால், பழங்கள், முட்டை போன்ற பொருட்களை வாங்கியுள்ளார்.

டாப்பு இவர் தான்
How India Instamarted 2025 அறிக்கையின்படி அதிக மதிப்பு கொண்ட ஒரு ஆர்டரில் பிரிவில் பெங்களூரை சேர்ந்த நபர் 3 ஐபோன்களை 4.3 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் செய்து அதிக தொகைக்கு ஆர்டர் செய்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதேபோல் நொய்டாவைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ரூ.2.69 லட்சம் செலவு செய்துள்ளார். ரோபோ வாக்யூம் க்ளீனர், எஸ்எஸ்டி, ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்கியுள்ளார்.
இங்கேயும் தங்கம்
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி தான் முக்கியமான வர்த்தக பொருளாக இருந்து வந்த நிலையில், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் உட்பட அனைத்து குவிக்காமர்ஸ் மற்றும் ஈகாமர்ஸ் தளத்தில் தங்கம் மற்றம் வெள்ளிக்கு அதிக தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தன்தேரஸ் பண்டிகையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் தங்க ஆர்டர்கள் 400 சதவீதம் உயர்ந்துள்ளன. பெங்களூருவில் ஒரு வாடிக்கையாளர் ஒரே ஆர்டரில் 1 கிலோ வெள்ளி (ரூ.1.97 லட்சம்) வாங்கியுள்ளார். இது பண்டிகை காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவோரின் குவிக் டெலிவரி சேவை தேவையை காட்டுகிறது.

முக்கிய பொருட்கள்
- மற்ற பொருட்களை பார்க்கும் போது மக்கள் ஒவ்வொரு 127 ஆர்டர்களில் ஒரு ஆர்டரில் காண்டம் உள்ளதாக ஸ்விக்கி அறிக்கை கூறுகிறது. செப்டம்பர் மாதத்தில் இது 24 சதவீதம் உச்சம் பெற்றது.
- காதலர் தினத்தில் நாடு முழுவதும் நிமிடத்துக்கு 666 ரோஜா ஆர்டர்கள் வந்துள்ளன.
- திங்கட்கிழமைகளில் "வார தொடக்க சோர்வு" தவிர்க்க பரிசு ஆர்டர்கள் அதிகம்.
இன்ஸ்டாமார்ட் போன்ற குவிக் டெலிவரி சேவைகள் மூலம் அவசர தேவைக்கான பொருட்களை மட்டும் அல்லாமல் பல்வேறு பொருட்கள் அதிகம் ஆர்டர் செய்ய துவங்கியுள்ளனர். காய்கறி, பால் பாக்கெட் துவங்கி தற்போது பண்டிகை கால பரிசு, கேஜெட் வரை குவிக் காமர்ஸ் ஷாப்பிங் விரிவாகியுள்ளன.
இதை தாண்டி அதிக மதிப்பு ஐபோன், தங்கம் போன்றவையும் இந்த ஆண்டு குவிக் காமர்ஸ் தளத்தில் ஷாப்பிங் செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications