PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வந்துவிட்டதா? லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (EPFO) பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு அடுத்தடுத்த நல்ல செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி குறித்து தான் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

தற்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் பிஎஃப் சந்தாதாரர்கள் வார கணக்கில் காத்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்து பிஎஃப் அதிகாரிகள் அதனை ஏற்று கொண்டால் தான் பணம் கிடைக்கும். அவர்கள் நிராகரித்தால் மீண்டும் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதனை எளிமைப்படுத்தும் வகையில் டிஜிட்டல் பேங்கிங் போல பிஎஃப் கணக்கினை மேலாண்மை செய்யும் முறை ஈபிஎஃப்ஓ 3.0 மூலம் நடைமுறைக்கு வரும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வந்துவிட்டதா? லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

இந்நிலையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம், சந்தாதாரர்கள் தங்களின் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலமாக உடனடியாக எடுப்பதற்கான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சோதனை ஓட்டம் முடிந்ததை அடுத்து இது விரைவில் தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதன் படி பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை கூகுள் பே , போன்பே போன்ற UPI செயலிகள் மூலமாக நேரடியாக எடுத்து பயன்படுத்தலாம். அதாவது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை உங்கள் வங்கி கணக்கு மாற்றலாம், ஏடிஎம் மூலம் எடுக்கலாம், யுபிஐ மூலம் எடுத்து பயன்படுத்தலாம்.

Also Read

பிஎஃப் உறுப்பினர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை கணக்கிலேயே லாக் செய்துவிட்டு, மீதமுள்ள தகுதியான தொகையை மட்டுமே UPI மூலம் உடனடியாக எடுக்க முடியும். 75% வரை எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் உள்ள 7 கோடிக்கும் அதிகமான EPFO உறுப்பினர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். குறிப்பாக அவசர மருத்துவத் தேவைகள் அல்லது பிற பணத் தேவைகளின் போது உடனடியாக பணத்தைப் பெற உதவும்.

Recommended For You

இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை தற்போதைக்கு சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதற்கேற்ப அமைப்பு ரீதியான மாற்றம் வந்த பிறகு முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இத்துடன் சேர்த்து, அடுத்த ஒரு மாதத்திற்குள் வாட்ஸ்அப் மூலமாக பி.எஃப் பேலன்ஸ் பார்ப்பது, கடைசியாக நடந்த 5 பரிவர்த்தனைகள் மற்றும் கிளைம் ஸ்டேட்டஸ் (Claim Status) ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளும் புதிய வசதியையும் EPFO அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+