இந்தியாவில் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயர்த்த வழிவகை செய்யும் காப்பீடு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து காப்பீடு சட்டங்களிலும் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் காப்பீடு திருத்த சட்டம் 2025ஐ மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
காப்பீடு மசோதா: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய துறையாக காப்பீட்டு துறை இருக்கிறது. மத்திய அரசு 2047 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கினை நிர்ணயம் செய்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் தான் காப்பீட்டு துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் 100% வரை முதலீடு செய்வதை அனுமதிக்க கூடிய வகையில் மசோதாவை அரசு நிறைவேற்றி இருக்கிறது.

அந்நிய முதலீட்டால் என்ன நடக்கும்?: இது 1991ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்த்திருத்ததிற்கு நிகராக பார்க்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன. தாராளமயமாக்கல் , தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை வைத்து இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து முதலீடு செய்வதற்காக கதவுகள் திறந்துவிடப்பட்டன.
பெரிய மாற்றம் ஏற்படுமா?: இதன் பிறகு நாட்டில் பல்வேறு துறைகளிலும் போட்டி அதிகரித்து நுகர்வோருக்கு குறைந்த விலைகளுக்கும், சிறந்த சேவைகளுக்கும் வழிவகை செய்தது. இந்திய நிறுவனங்கள் உலக தரத்தில் செயல்பட கற்றுக் கொண்டன. மூலதனம் ஒரு தடையாக இல்லாமல் இருந்தது . தொலை தொடர்பு துறை வேகமாக வளர்ந்தது, வங்கி துறை உள்ளிட்ட அனைத்துமே டிஜிட்டல்மயமாகின. மக்களுக்கு இதனால் நன்மைகள் தான் நடந்திருக்கின்றன.

எப்போது முதல் அனுமதி: தற்போது தற்போது அதுபோன்ற ஒரு சீர்திருத்தம் தான் காப்பீட்டு துறையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது . முதலில் 2000 ஆம் ஆண்டுகளில் தான் மத்திய அரசு காப்பீட்டு துறையில் வெளிநாட்டு முதலீடுகளை குறிப்பாக தனியார் நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கு அனுமதியே தந்தது. இதன் பிறகு தான் எல்ஐசி என்ற ஒரு நிறுவனத்திடம் மட்டுமே இருந்த காப்பீடு துறை படிப்படியாக தனியார் நிறுவனங்களும் கால்பதிக்க வழிவகை செய்தது.
காப்பீட்டு துறையில் முதலில் 26 சதவீதம் என இருந்த அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு கால போக்கிற்கு ஏற்ப 49 சதவீதம் என்றும் 74 சதவீதம் என்றும் உயர்த்தப்பட்டது. தற்போது அது 100% மாற்றப்பட்டிருக்கிறது . இந்தியாவில் தொலைதொடர்பு சேவை மற்றும் வங்கி துறையைப் போலவே மிகப்பெரிய மாற்றத்தை காப்பீடு துறையிலும் கொண்டுவரும் என அரசு நம்புகிறது .
ஏன் மக்கள் காப்பீடு எடுப்பதில்லை: இந்தியாவை பொறுத்தவரை இன்னும் காப்பீடு என்பது பெரும்பாலான மக்களை சென்று சேரவில்லை . தற்போது நாட்டில் காப்பீட்டு ஊடுருவல் என்பது சுமார் 4 சதவீதமாகவே இருக்கிறது. காப்பீடு பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு இருந்தாலும் அதிக பிரீமியம், மக்களால் எளிதில் அணுக முடியாத கிளைம் செண்டில்மெண்டுகள், அதிக செயலாக்க முறைகள் மக்கள் காப்பீட்டை நோக்கி செல்வதை தடுக்கின்றன. 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடிமக்களும் காப்பீடு பெற வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. தற்போது உள்ள நிறுவனங்களுக்கு மூலதன கட்டுப்பாடு, தொழில்நுட்ப கட்டுப்பாடு என பல சிக்கல்கள் உள்ளன.
இனி என்ன நடக்கும்: இதன் காரணமாக தான் அரசு காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி தந்திருக்கிறது. எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வாங்கலாம். இந்த புதிய மசோதாவின் படி காப்பீட்டு துறையை நிர்வகிக்கக்கூடிய ஐஆர்டிஏஐ அமைப்பு கூடுதல் அதிகாரம் பெற்றதாக மாற்றப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தை அனுமதியை பெறாமல் ஐஆர்டிஏஐ அமைப்பே சூழல்களை கருத்தில் கொண்டு விதிமுறைகளை மாற்றி அமைப்பது ,ஒழுங்கமைப்பு செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் .
இந்திய ரூபாய் வலுப்பெறும்: இந்தியாவில் வளர்ந்துவரும் துறை என்பதால் காப்பீட்டு துறையில் முதலீடு செய்ய அதிக வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வரும். அடுத்ததாக அதிக அளவிலான அமெரிக்க டாலர் நாட்டிற்குள் வரும் . இது இந்திய ரூபாயின் மதிப்பையும் நிலைப்படுத்த உதவும். தொலைதொடர்பு , வங்கி சேவை போல காப்பீடு துறை கிடையாது.

தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிக்கும்: இதில் வர கூடிய நிறுவனங்கள் வலுவான கட்டமைப்பையும் மக்களின் நம்பிக்கையையும் பெற வேண்டும். இந்த புதிய சட்டத்தால் புதிய நிறுவனங்கள் இந்திய சந்தைக்குள் வரும். இதனால் போட்டி அதிகரிக்கும். போட்டி அதிகரிக்கும் போது பிரீமியம் கட்டணங்கள் குறையவும் தரமான சேவை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும் போது தற்போது காப்பீடு துறையில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் மூலதனம் குறித்து கவலைப்படாமல் புதிய தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்ய முடியும். இது சிறந்த சேவை வழங்குவதற்கும் வேகமாக கிளைம் செட்டில்மெண்டுகளை முடிப்பதற்கும் உதவி செய்யும். இது தவிர காப்பீட்டு துறை உலக அளவிலான தர நிர்ணயம் கொண்டதாக மாறும்.
மக்களுக்கு பிரீமியம் குறையுமா?: பொதுமக்களாகிய நமக்கு உடனடி பலன் கிடைக்காது என்றாலும் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 15 சதவீதம் வரை காப்பீட்டு பிரீமியங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது இந்தியர்கள் மத்தியில் காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில் நிச்சயம் வாடிக்கையாளர்கள் பார்வையில் இது நன்மையே பயக்கும். இருந்தாலும் எதிர்க்கட்சிகள் நம் மக்களின் பான் , ஆதார் விவரங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் செல்லும் என்ற கவலையை வெளிப்படுத்துகின்றன.
அவசர முடிவு இல்லை: ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பீட்டு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் போட்டி அதிகரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தருகிறார். இரண்டு ஆண்டுகளாக விரிவாக ஆலோசித்த பின்பே இந்த மசோதாவை கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications