இந்திய முதலீட்டு சந்தையில் ஐடி சேவை நிறுவனங்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு, நிலையான லாபம், அதிகப்படியான வளர்ச்சி என்றாலே அது ஐடி சேவை துறை நிறுவனங்கள் தான். இதனாலேயே ஐடி நிறுவன பங்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் என அனைத்து பெரும் முதலீட்டாளர்களும் முதலீடு செய்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மோசமான வர்த்தக சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் வேளையில் ஜூன் காலாண்டில் எப்போதும் இல்லாமல் அதிகப்படியான முதலீடுகளை டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற முதல் தர ஐடி நிறுவனங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் அதிகப்படியான பங்குகளை முதலீடு செய்து வருகிறது.

ஜூன் மாதம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆறாவது காலாண்டாக உயர்த்தியுள்ளது. இன்ஃபோசிஸில், ஜூன் காலாண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் தனது பங்கு இருப்பை 13.64 சதவீதமாக உயர்த்தியுள்ளது, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சுமார் ஏழு காலாண்டுகளாக பங்கு இருப்பை உயர்த்தி வருகிறது என AceEquity தரவுகள் காட்டுகிறது.
இதே போன்று ஹெச்சிஎல் டெக் நிறுவனமும் ஜூன் காலாண்டில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தனது பங்கு இருப்பு அளவீட்டை 6.53 சதவிகிதம் என்ற வரலாற்று உச்ச அளவீட்டை தொடு அளவுக்கு உயர்த்தியது மட்டும் அல்லாமல் கடந்த 10 காலாண்டுகளுக்கு HCL TECH பங்குகளை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
மேலும் விப்ரோவில் காப்பீட்டு நிறுவனங்கள் தனது பங்கு இருப்பை 5.01 சதவீதமாக உயர்த்தியது, டெக் மஹிந்திராவில் தனது பங்கு இருப்பை 12.55 சதவீதமாக உயர்த்தியது.
காப்பீட்டு நிறுவனங்கள் ஜூன் காலாண்டில் TCS இல் 5.74 சதவீத பங்குகளை வைத்திருந்தனர், இதற்கு எதிராக மார்ச் மாதத்தில் 5.57 சதவீதம், 2022 டிசம்பரில் 5.44 சதவீதம், 2022 செப்டம்பரில் 5.13 சதவீதம், ஜூன் 2022 இல் 4.88 சதவீதம், மார்ச் 2022 இல் 4.48 சதவீதம் மற்றும் டிசம்பர் 2021 காலாண்டில் 4.46 சதவீதம் ஆக இருந்தது என AceEquity தரவுகள் கூறுகிறது. செப்டம்பர் 2011 காலாண்டில் இதன் அளவு 6.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications