மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக காப்பீட்டு துறையினர் மத்திய அரசிடம், மருத்துவ மற்றும் டேர்ம் காப்பீட்டை மிகவும் மலிவு விலையில் சமானிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பை வழங்கும் காப்பீட்டு பாலிசிகளை மக்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் வரி விலக்கை அதிகரிக்க வேண்டும். காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தினால், இத்துறையில் அன்னிய முதலீடு குவியும் என்று பல்வேறு கோரிக்கைகள் விடுத்து இருந்தனர். தற்போது காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு 74 சதவீதமாக உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது. காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த மேம்படுத்த வரம்பு இந்தியாவில் முழு பிரீமியத்தையும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பொருந்தும். மேலும், வெளிநாட்டு முதலீட்டுடன் தொடர்புடைய தற்போதைய நிபந்தனைகள் மதிப்பாய்வு செய்யப்பட்ட எளிமைப்படுத்தப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் காப்பீட்டு துறையில் முதலீட்டை அதிகரிக்க வழி செய்யும்.

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு அதிகரிப்பு என்ற செய்தியால், பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே, எச்டிஎஃப்சி லைப், எஸ்பிஐ லைப், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் மற்றும் ஸ்டார் ஹெல்த் ஆகிய பங்குகளின் விலை 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. அதேசமயம், எல்ஐசி, கோ டிஜிட்டல் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் மேக்ஸ் பைனான்சியல் ஆகிய பங்குகளின் விலை 2 சதவீதத்துக்கும் சிறிது கூடுதலாக உயர்ந்தது. இருப்பினும், லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் செயல்பட்டதால் பல நிறுவன பங்குகளின் விலை சரிவு கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே, எஸ்பிஐ லைப் பங்கின் விலை சுமார் ரூ.40 வரை உயர்ந்தது. இறுதியில் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2 சதவீதம் குறைந்து ரூ.1,454.60ஆக இருந்தது. எச்டிஎஃப்சி லைப் பங்கு விலை வர்த்தகத்தின் இடையே ரூ.667.25 வரை உயர்வு கண்டது. இறுதியில் முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.03 சதவீதம் சரிந்து ரூ.625.20ல் முடிவுற்றது. எல்ஐசி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.28 சதவீதம் உயர்ந்து ரூ.847.75ல் முடிவுற்றது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications