பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் பாட்டியா. தன்னிடம் இருக்கும் குறைந்தபட்ச இடத்தை அவர் நிறைவாக பயன்படுத்தி ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
ராம்குமாருக்கு சொந்தமாக 0.25 ஹெக்டேர் நிலம் இருக்கிறது, அதை அவர் திறமையான முறையில் பயன்படுத்தி குறைந்த நிலத்தில் கூட எப்படி நிறைவான வருமானம் ஈட்ட முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக மாறி இருக்கிறார்.

ராம்குமாரை பொறுத்தவரை அவருடைய குடும்பத்தில் ஆறு பேர் இருக்கின்றனர். அந்த ஆறு பேருமே நிதி ரீதியாக இவரை தான் சார்ந்து இருக்கின்றனர். குடும்பத்தின் வறுமை காரணமாக பத்தாம் வகுப்புடன் தன்னுடைய படிப்பை நிறுத்திவிட்டார்.
குடும்ப வறுமையை போக்க வேண்டும் என எண்ணிய அவர் தங்களிடம் இருக்கும் சிறு நிலத்தை வைத்து எப்படி சாதிக்க முடியும் என ஆய்வு செய்தார். உள்ளூரில் செயல்பட்ட வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டார். அவர்கள் இவருக்கு இந்த சிறிய அளவு நிலத்தை எப்படி ஒருங்கிணைந்த கூட்டு வேளாண் நடைமுறைக்கு மாற்றி பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர். அதனை புரிந்து கொண்ட அவர் தன்னிடம் இருக்கும் குறைவான நிலத்தில் கால சூழலுக்கு ஏற்ப பயிர்களை இட்டு எப்படி லாபம் காண்பது என்பதை கற்றுக் கொண்டார்.
காய்கறி விவசாயம், பால்பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் என மூன்றையும் ஒருங்கிணைத்து தனக்கென சொந்தமான ஒரு வேளாண் நடைமுறையை அவர் உருவாக்கி இருக்கிறார். உதாரணமாக இவர் தன்னுடைய மாட்டுப் பண்ணையில் கிடைக்கும் சாணத்தை கொண்டு மண்புழு உரங்களை தயாரிக்கிறார். அதன் மூலம் தன்னுடைய விவசாய நிலத்தின் மண்ணை வளப்படுத்துகிறார். எனவே அவர் நிலத்தில் எந்த ஒரு விதை போட்டாலும் அது நன்றாக மகசூல் தருகிறது.
கோதுமை ,நெல் , சோளம் என இல்லாமல் கால சூழலுக்கு ஏற்ற வகையான காய்கறிகளையும் அவர் வேளாண்மை செய்கிறார். இதன் மூலம் குறைந்த இடமாக இருந்தாலும் ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய நிலமாக தன்னுடைய நிலத்தை அவர் மாற்றி இருக்கிறார்.
ராம்குமாரை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் மாட்டுப் பண்ணை மூலம் 8 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். அது தவிர்த்து விவசாயத்தின் மூலமும் அவருக்கு கணிசமான தொகை வருமானமாக கிடைக்கிறது. தன்னுடைய நிலத்தில் தயாரிக்கப்படும் மண்புழு உரத்தை வெளியில் விற்பனை செய்வதன் மூலமும் வருமானம் ஈட்டுவதாக அவர் கூறுகிறார்.
வாழ்க்கையில் முன்னேறி வரவேண்டும் என்ற எண்ணமும் அதற்கான சரியான அணுகுமுறையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய தொழிலில் வெற்றி பெற முடியும் என்பதற்கு முன் உதாரணமாக இவர் மாறியிருக்கிறார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications