இன்டெல் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிப்-பு டான் (Lip-Bu Tan) பொறுப்பேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக என்விடியா நிறுவனத்திற்குப் போட்டியளிக்கும் வகையில், முக்கிய சிப் உற்பத்தி பிரிவுகள் இனி தான் நேரடியாக கணிக்காணிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதோடு முக்கியமான பதவியை இந்தியர் ஒருவருக்கும் கொடுத்துள்ளார்.
லிப்-பு டான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராப் ப்ரூக்னர், மைக் ஹர்லி மற்றும் லிசா பியர்ஸ் ஆகிய நீண்டகால தொழில்நுட்ப நிர்வாகிகள் இனி நேரடியாக தலைமை நிர்வாக அதிகாரிக்கு அறிக்கை செய்வார்கள். மேலும், முன்னர் மிச்செல் ஜான்ஸ்டன் ஹோல்தஸ் (Johnston Holthaus) மேற்பார்வையில் இருந்த இன்டெல் நிறுவனத்தின் முக்கியமான டேட்டா சென்டர் பிரிவு, வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) சிப் பிரிவு மற்றும் பர்சனல் கம்பியூட்டர் சிப் பிரிவு ஆகியவையும் இனி லிப்-பு டானின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்.

இதேபோல் மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இன்டெல் கார்ப்பரேஷன் தனது நெட்வொர்க்கிங் சிப் பிரிவின் தற்போதைய தலைவரான சச்சின் கட்டியை புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் (Chief Technology Officer) மற்றும் தலைமை செயற்கை நுண்ணறிவு அதிகாரியாகவும் (Chief AI Officer) நியமித்துள்ளது.
இந்த நியமனம் அனைத்தும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய தொழில்நுட்பத் தலைமைத்துவப் பதவிகளில் மேலும் ஒரு இந்தியர் இணைந்துள்ளார். யார் இந்த சச்சின் கட்டி..?
கன்னடர்: கர்நாடகாவின் பெலகாவி-யில் இருந்து அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றின் உயர் பதவியை சச்சின் கட்டி அடைந்திருப்பது இந்தியர்கள் பெருமைப்படும் விஷயமாக உள்ளது. இதேபோல் அமெரிக்க டெக் பிரிவில் ஏராளமான இந்தியர்கள் ஆதிக்கம் செய்து வரும் வேளையில், தற்போது இந்த முக்கியமான லிஸ்ட்டில் இவரும் சேர்ந்துள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரி: செயின்ட் சேவியர்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த சச்சின் கட்டி, இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஐஐடி பாம்பேவில் 2003 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற கையோடு அமெரிக்காவில் உள்ள எம்ஐடி கல்லூரிக்கு சென்றார் சச்சின் கட்டி. அங்கு அவர் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் இரண்டையும் பெற்றார். அவரது முனைவர் பட்ட ஆய்வின் மூலம் எம்ஐடி கல்லூரியில் தலைசிறந்த ஊழியர்களுக்கு அளிக்கப்படும் மிகவும் மதிப்புமிக்க ஜார்ஜ் ஸ்ப்ரோல்ஸ் விருதைப் பெற்றார்.
இதே தொடர்ந்து அவர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வயர்லெஸ் முறையில் திறமையான தரவு பரிமாற்றத்திற்கான முறையையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
முதல் நிறுவனம்: சச்சின் கட்டி இந்த தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் நோக்கில் குமு நெட்வொர்க்ஸ் (Kumu) நிறுவனத்தை நிறுவினார். 2014 ஆம் ஆண்டு வரை தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த அவர், கணிசமான venture capital நிதியைப் பெற்று டொய்ட்ச் டெலிகாம் மற்றும் வெரிசோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து அவருடைய கண்டுப்பிடிப்புகளை சோதனைகளையும் நடத்தினார். இருப்பினும், குமு நெட்வொர்க்ஸ் 2024 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.
இரண்டாவது நிறுவனம்: 2016 ஆம் ஆண்டில் சச்சின் கட்டி உஹானா (Uhana) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை இணைந்து நிறுவினார். இந்த நிறுவனம் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. இந்த நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் விஎம்வேர் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.
புதிய துவக்கம்: இந்த கையகப்படுத்துதலுக்குப் பிறகு, சச்சின் கட்டி VMWare நிறுவனத்தின் டெல்கோ & எட்ஜ் ஸ்ட்ராடஜியின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
இன்டெல் பயணம்: பின்னர் 2021 ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனத்தில் இணைந்தார். ஆரம்பத்தில் இன்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க் மற்றும் எட்ஜ் குழுவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றிய அவர், பின்னர் அதன் பொது மேலாளராகவும் உயர்ந்தார்.
இந்த 5 வருடத்தில் சச்சின் கட்டி இன்டெல் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்திடம் பெற்ற நம்பிக்கை தான் தற்போது தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் (Chief Technology Officer) மற்றும் தலைமை செயற்கை நுண்ணறிவு அதிகாரியாகவும் (Chief AI Officer) நியமித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications