ஒரு காலத்தில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு மற்றும் டிசைன் துறையில் தனது கொடி மட்டுமே பறந்த இன்டெல் தற்போது மோசமான நிலையில் உள்ளது. ஏஐ சிப் துறையில் எவ்விதமான முன்னேற்றமும் அடைய முடியாதது மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போனுக்கான சிப் தயாரிப்பு ரேசிலும் தோற்றுப்போன நிலையில் பெரிய அளவில் தேங்கிப்போனது.
இதனால் கடந்த ஒரு வருடமாக ஊழியர்கள் பணிநீக்கம், கிளை நிறுவனங்கள் விற்பனை, அலுவலகங்கள் மூடல், புதிய திட்டத்திற்கு நிதி அளிக்காதது என செலவுகளை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது இன்டெல் நிர்வாகம்.

இன்டெல் நிறுவனம் ஏஐ சிப் தயாரிப்புத் துறையில் போராடி வரும் வேளையில், இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரர் பாட் கெல்சிங்கர் டிசம்பர் 1 முதல் பதவியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தது. இதேவேளையில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.
பாட் கெல்சிங்கர் செயல்பாடுகள் பெரிய அளவில் பலன் அளிக்காத காரணத்தால், இன்டெல் உயர்மட்ட நிர்வாகத்திற்கு இவர் மீதான நம்பிக்கை குறைந்தது. இதன் வாயிலாக அவராகவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்டெல் நிறுவனத்தின் புதிய சிஇஓ தேர்தெடுக்கும் வரையில் இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான டேவிட் ஸின்ஸ்னர் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரியான மிஷெல் ஜான்ஸ்டன் ஹோல்தாவுஸ் ஆகியோர் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செமி கண்டக்டர் தொழில்துறையில் சவாலான காலத்தை கடந்து வரும் இன்டெல் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் இந்த எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்விடியா, ஸ்னாப்டிராகன், TSMC மற்றும் சாம்சங் போன்ற போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது இன்டெல்.
Pat Gelsinger - 2021 ஆம் ஆண்டில் வீஎம்-வேர் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பின்னர் இன்டெலில் மீண்டும் இணைந்தார். இன்டெல் நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுக்கவும், முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக மீண்டும் நிலைநிறுத்தவும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. Pat Gelsinger சில பிரிவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டிலும் சந்தையின் போட்டியை சமாளிக்கும் அளவுக்கு தளத்தை இன்டெலில் அவரால் உருவாக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications