உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து அதன் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஏற்கனவே சிப் தயாரிப்பு மற்றும் அதன் விலை அளவில் பெரும் பாதிப்பு இருக்கும் வேளையில் இன்டெல் நிறுவனத்தின் கணிப்பில் பெரும் அச்சத்தைச் சிப் தயாரிப்புச் சந்தையில் உருவாக்கியுள்ளது.
இன்டெல் நிறுவனத்தின் கணிப்பு யாருக்கெல்லாம் பாதிப்பு. ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் அளவுக்குச் சரியும் வகையில் என்ன நடந்தது.
ரெசிஷன் பாதிப்பு
உலகளவில் நிலவும் ரெசிஷன் பாதிப்பு மூலம் கம்ப்யூட்டர் விற்பனை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இன்டெல் நிறுவனம் நஷ்டம் அடையும் என்றும், வருவாய் 3 பில்லியன் டாலர் வரையில் சரியும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
டேட்டா சென்டர்
இதற்கு முக்கியக் காரணமாக உலகளவில் டேட்டா சென்டர் வர்த்தகத்தில் ஏற்பட்டு உள்ள மந்தமான வளர்ச்சியை காட்டுகிறது இன்டெல்.
இன்டெல் நிறுவன பங்குகள்
இதன் எதிரொலியாக அமெரிக்கச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள இன்டெல் நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 6.4 சதவீதம் வரையில் குறைந்து 8 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
இதேபோல் இன்டெல் நிறுவனத்தின் முக்கியமான சப்ளையரான KLA கார்ப் பங்குகளும் நேற்று 6.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
போட்டி நிறுவனங்கள்
ஆனால் இன்டெல் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான AMD, Nvidia நிறுவன பங்குகள் உயர்வுடனே உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இன்டெல் நிறுவனத்தின் வர்த்தகத்தை இவ்விரு நிறுவனங்களும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
இன்டெல் 8 பில்லியன் டாலர் இழப்பு
இன்டெல் நிறுவனத்தின் வரலாறு காணாத 8 பில்லியன் டாலர் வீழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை என Rosenblatt Securities சேர்த்த பங்கு சந்தை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிஇஓ
இன்டெல் கம்ப்யூட்டர் சிப் சந்தையில் தான் இழக்கும் வர்த்தகத்தைத் திரும்பப் பெற்று மீண்டும் ஆதிக்க நிலையை அடைய கான்டிராக்ட் உற்பத்தியாளர்கள் விரிவாக்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய தொழிற்சாலை அமைக்க இன்டெல் சிஇஓ Patrick P. Gelsinger முயற்சியில் செய்தாலும், இதில் பலன் அளிக்காமலும், நடைமுறைக்கு வருவதிலும் இருக்கும் பிரச்சனையை மார்ச் காலாண்டில் கணிப்புகள் காட்டுகிறது.
TSMC நிறுவனம்
இன்டெல் நிறுவனத்தின் சக போட்ட நிறுவனமான AMD தனது உற்பத்தியைத் தென் கொரியாவின் TSMC நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இதனால் உற்பத்தி அளவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து பெரும் தாக்கத்தைக் கம்ப்யூட்டர் சிப் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications