கூகுளை தொடர்ந்து இன்டெல் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிவதற்கு அனுமதி தந்தன. பெருந்தொற்று முடிவு பெற்று இயல்பு நிலை திரும்பியதை அடுத்து கூகுள் , அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என அறிவித்துள்ளன.
கூகுள் நிறுவனத்தை பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து தங்களுடைய ஊழியர்கள் கட்டாயம் வாரத்தில் நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது. இந்த உத்தரவை பின்பற்றாத ஊழியர்கள் வேறு நிறுவனத்தை பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த இன்டெல் நிறுவனமும் இனி தங்கள் நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இன்டெல் நிறுவனம், தங்கள் நிறுவன ஊழியர்கள் சுமார் 20% பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. கடந்த ஆண்டு தான் இந்த நிறுவனம் 15,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. நடப்பாண்டில் 20% பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சூழலில் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இன்டெல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இன்டெல் நிறுவனம் அதற்கேற்ற சிப்களை உற்பத்தி செய்ய முடியாமல் பின்தங்கி இருக்கிறது. கடந்த மாதம் தான் தலைமை செயல் அதிகாரியாக லிப் பூ டான் நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவி ஏற்றது முதலே நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்.
நிறுவனத்தின் மேலாண்மை பிரிவையே இவர் மறுக்கட்டமைப்பு செய்திருக்கிறார். பணிநீக்க நடவடிக்கை , ஊழியர்களின் பொறுப்புகளில் மாற்றம் என பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்நிலையில் தான் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணி புரிய வேண்டும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இதுநாள் வரை இன்டெல் ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என சலுகை வழங்கப்பட்டது.
தற்போது வாரத்தில் 4 நாட்கள் அலுவலகம் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது செப்டம்பர் மாதம் முதல் அது அமலுக்கு வர இருக்கிறது. ஊழியர்கள் குழுவாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் போது நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பதாகவும், நிறுவனத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல இது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications