அமெரிக்க நிறுவனமான இன்டெல் தனது செமிகண்டக்டர் உற்பத்தி கிளையை இந்தியாவில் விரைவில் தொடங்கலாம்.
இந்தியாவில் செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், உயர்தர தொழில் நுட்ப உற்பத்தியில் இந்தியாவை உலகளாவிய மையமாக்கும் நோக்கத்துடன் அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்டெல் உற்பத்தி
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான இன்டெல் தனது, உற்பத்தி கிளையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
இந்திய அரசின் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்காக ஊக்கத்தொகைகள் அறிவித்துள்ளது. இது மேற்கொண்டு செமிகண்டக்டர் உற்பத்தியினை ஊக்குவிக்க பயனுள்ளதாக இருக்கலாம்.
செமிகண்டக்டர் பற்றாக்குறை
ஆக இந்த பலனுக்கு மத்தியில் இன்டெல் நிறுவனம் வரவிருக்கும் ஆண்டுகளில், செமிகண்டக்டர் உற்பத்தியினை இந்தியாவில் செய்யலாம். சர்வதேச அளவில் நிலவி வரும் செமிகண்டக்டர் பற்றாக்குறைக்கு மத்தியில், இன்டெல் நிறுவனம், சிப் உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. உலகளவில் தேவையானது இருந்து வரும் நிலையில், இது இந்தியாவுக்கு நல்லதொரு வாய்ப்பாகவும் அமையலாம்.
தேவை அதிகம்
ஏற்கனவே இந்தியாவில் சில நிறுவனங்கள் சிப் உற்பத்தியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. எனினும் இந்தியா போன்ற பெரிய சந்தைகளுக்கு போதுமானதாக இருக்குமா? என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளில் தேவையானது அதிகம் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற முயற்சிகள் இந்தியா தன்னை சர்வதேச சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ள உதவும்.
இன்டெல் ஆலை
இது இந்தியாவுக்கு மட்டும் அல்ல, இந்திய சந்தையினை பயன்படுத்திக் கொள்ள இன்டெல்லுக்கும் ஒரு வாய்ப்பாக அமையலாம். ஆக இன்னும் சில ஆண்டுகளில் இன்டெல் ஒரு சிப் ஆலையை உற்பத்தி செய்யலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 1969 மற்றும் 2005ல் பல முறை அதே முயற்சியை பல முறை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. எனினும் தற்போதும் அதே எண்ணத்தில் முதலீடு செய்யும் திட்டம் உள்ளதா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசின் அனுமதி கிடைக்கவில்லை
1969ம் ஆண்டில் நாட்டில் செமிகண்டக்டர் ஆலையை திட்டமிட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த சமயத்தில் அரசின் அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல 2005 - 06லும் அதே திட்டத்தினை இன்டெல் அமல்படுத்த திட்டமிட்டது. பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய தயாராக இருந்தது, ஆனால் அப்போதும் அந்த திட்டம் வெறும் திட்டமாகவே போனது.
அரசே உணர்ந்து கொண்டுள்ளது
ஆனால் தற்போது தேவையும் அதிகம். அரசும் அதனை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட ஆரம்பித்துள்ளது. ஆக விரைவில் இந்த பல வருட கனவு என்பது அமலுக்கு வரலாம்.
கடந்த ஆண்டு ஜெர்மனி-யில் இன்டெல் தனது இருப்பினை விரிவாக்கம் செய்தது. அமெரிக்காவிலும் விரிவாக்கம் செய்தது. அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் விரிவாக்கம் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் இந்திய அரசு சரியான ஒத்துழைப்பை என்பதை கொடுக்காவிட்டாலும், தற்போது மானியத்துடன் அறிவித்துள்ளது பலனளிக்கலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications