உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு டெக் ஜாம்பவான்களும் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல கம்ப்யூட்டர் மற்றும் சிப் உற்பத்தியாளரான இன்டெல் நிறுவனமும், அதன் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பர்சனல் கம்ப்யூட்டர் சந்தையானது பெரும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
பணி நீக்கமா?
இன்டெல் நிறுவனத்தின் இந்த பணி நீக்கமானது எந்த துறை சார்ந்தது என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இம்மாத தொடக்கத்திலேயே இன்டெல் பணி நீக்கம் இருக்கலாம் என அறிவித்திருந்தது. மேலும் இந்த பணி நீக்கம் விற்பனை மற்றும் சந்தைபடுத்தல் பிரிவில் இருக்கலாம் என்ற யூகங்களும் இருந்து வருகின்றது.
20% ஊழியர்கள் பாதிப்பா?
இன்டெல்லின் இந்த பணி நீக்க நடவடிக்கையினால் 20% ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்டெல் நிறுவனத்தில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி 1,13,700 ஊழியர்கள் உள்ளனர்.
எனினும் இந்த பணி நீக்கம் குறித்து இன்டெல் நிறுவனம் இதுவரையில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை.
விற்பனை சரிவு
கடந்த ஜூலை மாதம் அதன் வருடாந்திர விற்பனை குறையலாம் என கணித்துள்ள நிலையில், இரண்டாவது காலாண்டில் அதன் லாபமும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் இத்தகைய செய்திகள் வலம் வந்து கொண்டுள்ளன.
என்ன காரணம்?
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதமானது அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகள், அலுவலகங்கள் கொரோனா காரணமாக லாக்டவுன் செலவுகள் குறைந்துள்ளது. இதற்கிடையில் மக்களின் கணினி செலவுகளும் குறைந்துள்ளது.
தேவையில் தாக்கம்
முக்கிய கம்ப்யூட்டர் சந்தையான சீனா மற்றும் உக்ரைன் மோதல், கோவிட் -19 கட்டுப்பாடுகளால் சிப்மேக்கர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது சப்ளை சங்கிலித் சங்கிலியிலும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது. இது தேவையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் விற்பனையில் சரிவினைக் காண வழிவகுத்துள்ளது. இது இனியும் மந்த நிலை தொடரலாம் என்ற நிலையில், இனியும் விற்பனை சரிய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications