சென்னை: ஒரு காலத்தில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு மற்றும் டிசைன் துறையில் தனது கொடி மட்டுமே பறக்கும் அளவுக்கு பெரும் ஆதிக்கத்தோடு இருந்த இன்டெல் தற்போது மோசமான நிலையில் சிக்கிக்கொண்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக இன்டெல் நிறுவனம் அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால் ஒட்டுமொத்த சிப் துறையும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இன்டெல் நிறுவனம் ஏஐ சிப் தயாரிப்புத் துறையில் போராடி வரும் வேளையில், கடந்த வாரம் 15000-க்கும் அதிகமான பணியாளர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக அறிவித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்த மீளாத வேளையில் அடுத்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட சிப் டிசைன் நிறுவனமான ஆர்ம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில், இன்டெல் நிறுவனம் வைத்திருந்த 1.18 மில்லியன் பங்குகளை இரண்டாவது காலாண்டில் விற்றதாக, பங்குச்சந்தையில் சமர்ப்பித்த இன்டெல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான ஆர்ம் நிறுவனத்தின் பங்கின் சராசரி விலையின் அடிப்படையில், இந்த விற்பனையின் மூலம் இன்டெல் நிறுவனம் சுமார் 146.7 மில்லியன் டாலர்களை திரட்டியிருக்கும் என்று ராய்ட்டர்ஸ் கணக்கிட்டுள்ளது.
இன்டெல் நிறுவனம் சிப் தயாரிப்புத் துறையில் தனது ஆதிக்க நிவையை மீட்டெடுக்கப் போராடி வருகிறது. இதற்காகத் தொழிலாளர்களைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாகவே ஆர்ம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேட் கெல்சிங்கர், நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே இந்த பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, நிதி திரட்டப்பட்டு உள்ளது. இந்த முதலீட்டை ஏஐ சிப் தயாரிப்பில் முதலீடு செய்ய இன்டெல் முடிவு செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இன்டெல் நிறுவனத்தின் கையில் ஜூன் மாத இறுதியில் 11.29 பில்லியன் டாலர் தொகை ரொக்க பணம் இருந்தது. அதே நேரத்தில், மொத்த கடன் அளவு சுமார் 32 பில்லியன் டாலராக இருந்தது.
இந்த ஆண்டு இன்டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 59 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி இன்டெல் டிவிடென்ட் தொகையை கொடுப்பதை நிறுத்துவதாக அறிவித்த நாளில் இதன் பங்கு மதிப்பு 26 சதவிகிதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications