சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், தனது வர்த்தகம், தயாரிப்புகளின் டிமாண்ட் குறைந்த காரணத்தால் செலவுகளைக் குறைக்கும் விதமாக மொத்த ஊழியர்களில் 15% க்கும் அதிகமான பணியாளர்களைப் பணி நீக்கம் செய்யப்போவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள சிப் தயாரிப்பாளர்கள் அதிகப்படியான வளர்ச்சியும், வருமானத்தையும் ஈர்த்து வரும் வேளையில் இன்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்டெல் நிறுவனம் ஜூன் காலாண்டில் 1.6 பில்லியன் டாலர் இழப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், உடனடியாக இந்த மோசமான நிலையைச் சமாளிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் இன்டெல் நிர்வாகம் இந்த ஆண்டு 20 பில்லியன் டாலர் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி பேட் கெல்சிங்கர் கூறுகையில், "எங்கள் இரண்டாம் காலாண்டின் நிதி செயல்திறன் ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும், முக்கிய தயாரிப்பு மற்றும் செயல்முறையில் புதிய சாதனைகளை அடைந்தோம்" என்று காலாண்டு முடிவு அறிக்கையில் தெரிவித்தார். இதோடு அவர் "இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் எங்களின் வர்த்தக போக்குகள் எதிர்பார்த்ததை விடச் சவாலானதாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.
இன்டெலின் செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் தயாரிப்புகள் மற்றும் தொழிற்சாலையை முழுமையாகப் பயன்படுத்தப்படாத காரணத்தால் இரண்டாம் காலாண்டின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்டெல் நிதி அதிகாரி டேவிட் ஜின்ஸ்னர் 1.6 பில்லியன் டாலர் நஷ்டத்திற்கு பதில் அளித்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் இன்டெல் நிறுவனத்தில் 124,800 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள பணிநீக்கம் மூலம் சுமார் 18,000 பேர் வேலை இழக்க நேரிடும். இதேவேளையில் ஜூன் மாதத்தில், இன்டெல் நிறுவனம் இஸ்ரேலில் தொழிற்சாலை விரிவாக்கத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதன் மூலம் இந்த சிப் தொழிற்சாலைக்குக் கூடுதலாக 15 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுவதை நிறுத்தப்பட்டு உள்ளது
இன்டெல் தனது சக போட்டியாளர்களான என்விடியா, ஏஎம்டி மற்றும் குவால்காம் ஆகியவற்றுடன் வலுவான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த 3 நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் புரட்சியைச் செய்துள்ளது, ஆனால் இப்பிரிவில் இன்டெல் தனக்கான இடத்தை பிடிக்க முடியாததே இந்த மோசமான வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
பல தசாப்தங்களாக, இன்டெல் நிறுவனம் லேப்டாப்கள் முதல் டேட்டா சென்டப் வரை எல்லாவற்றையும் இயக்கும் சிப்களை உருவாக்கி சந்தையில் முடிசூடா மன்னனாக இருந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக என்விடியா போன்ற அதன் போட்டியாளர்கள் செயற்கை நுண்ணறிவு தளத்தில் முன்னேறி இன்டெல்-க்கு போட்டியாக உருவெடுத்துள்ளது.
என்விடியா தலைவர் ஜென்சன் ஹுவாங், ஏஎம்டி சிஇஓ லிசா சு மற்றும் குவால்காமின் கிறிஸ்டியானோ அமோன் ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் செயற்கை நுண்ணறிவுக்குச் சிறந்தது பெருமை பேசி வரும் வேளையில் இன்டெல் வாய் திறக்க முடியாமல் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications