இன்றெல்லாம் ஒருவரின் சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்துவது என்பது மிகவும் சிரமமானதாக மாறியுள்ளது. ஏனெனில் விலைவாசி அதிகரித்துள்ள காரணத்தினால் எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தாத சூழல்தான் நிலவுகிறது. இதன் காரணமாக பலரும் கடன் வாங்குவது குறித்து யோசிக்கின்றனர். அப்படி பெரும் கடன்களுக்கும் அதிக வட்டியும் வசூலிக்கப்படுகிறது. எனவே இந்தப் பதிவில் வட்டி இல்லாமல் கடனை பெறுவதற்கு நம்பகமான வாய்ப்புகள் என்னென்ன இருக்கிறது? என்பது குறித்து பார்ப்போம்.
நோ காஸ்ட் ஈஎம்ஐ: சில்லரை வர்த்தகத்தில் வட்டி இல்லா கடன்கள் பிரபலமடைந்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குனர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர் பொருட்கள் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ்களுக்கு எந்தவித வட்டியும் இல்லாமல் ஈஎம்ஐ வசதியை வழங்குகின்றன. இதன் மூலம் கூடுதல் வட்டி எதுவும் செலுத்தாமல் மொத்தமாக செலவு செய்யும் சாமான்களை மாதத் தவணைகளாக பிரித்து வாங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக 60,000 ரூபாய் விலை உள்ள ஸ்மார்ட் ஃபோனை 12 மாதங்களுக்கு மாதம் 5000 ரூபாய் செலுத்தி வாங்கலாம். இந்தத் தவணைகள் வட்டி இல்லாதவை என்றாலும்.. இதற்கு சில செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படலாம். எனவே நீங்கள் உண்மையிலேயே வட்டி எதுவும் இல்லாமல் கடனை பெறுகிறீர்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மறைமுக கட்டணங்கள் குறித்தும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். பல்வேறு முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் குறிப்பாக பண்டிகை விற்பனையின் போது இது போன்ற நோ காஸ்ட் ஈஎம்ஐ விருப்பங்கள் கிடைக்கின்றன.
விவசாயிகளுக்கான வட்டியில்லா கடன்கள்: விவசாயிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குதல் வருகிறது. அதன்படி சில வட்டி இல்லா கடன்களும் கிடைக்கின்றன. விவசாயம் தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளுக்காக இதுபோன்ற திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விதைகள், உரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
உதாரணமாக சில மாநில அரசுகள் வட்டி இல்லாமல் கடன்களை வழங்குகின்றன .இருப்பினும் இந்த கடன்களுக்கு அபராதங்களை தவிர்ப்பதற்கு சரியான நேரத்தில் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். இத்தகைய திட்டங்கள் விவசாயிகளின் சுமையை குறைத்து உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
மைக்ரோ பைனான்ஸ் மற்றும் NGO லோன்கள்: சில நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக நோக்கத்திற்காக வட்டியில்லாத கடன்களை வழங்குகின்றன. இவை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், சிறு தொழில் முனைவோர் மற்றும் பெண்களை இலக்காக கொண்டு வழங்கப்படுகின்றன. சில தொண்டு நிறுவனங்கள் கல்வி மற்றும் சிறு தொழில் தொடங்குவதற்கு வட்டியே இல்லாத கடன்கள் அல்லது குறைந்த வட்டிலான கடன்களை வழங்குகின்றன.
கிரெடிட் கார்டு சலுகைகள்: பல கிரெடிட் கார்டுகள் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டியில்லா இஎம்ஐ விருப்பங்களை வழங்குகின்றன. இந்த சலுகைகள் பெரும்பாலும் குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதை வைத்து கார்டுதாரர்கள் வட்டி இல்லாமல் பொருட்களை பெற்று மீண்டும் திருப்பிச் செலுத்தலாம். ஆனால் இப்படி கிரெடிட் கார்டுகளை பெறும்போது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கவனமாக படிப்பது அவசியம். சில கிரெடிட் கார்டுகளுக்கு செயலாக்கக் கட்டணங்கள் இருக்கலாம். எனவே இதயும் பார்த்து அதன் பிறகு கடன் பெறவும்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications