Volodymyr Zhylyansky 2019 ஆம் ஆண்டில் உக்ரைனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், ஒரு நகைச்சுவை நடிகராக பணியாற்றியுள்ளார். அவர், Kvartal 95 என்ற காமெடி குழுவை நிறுவியவர். இது உக்ரைனின் நகைச்சுவை உலகில் ஒரு பெரிய பெயராக திகழ்ந்தது. அதனுடன், டிஜிட்டல் மாற்றங்களுக்கு பெரிதும் ஆதரவளித்து, உக்ரைனின் அரசு மற்றும் சமூக சேவைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான பல முன்னெடுப்புகளை எடுத்துள்ளார். உக்ரைன் அதிபரான வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் வாழ்க்கை உள்ளிட்ட அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.
அரசியலில் களமிறங்குவதற்கு முன், வோலோடிமிர் செலென்ஸ்கி ஒரு பிரபல நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர். அவர் உக்ரேனிய தொலைக்காட்சி தொடரான Servant of the People-ல் நாயகனாக நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். இந்த தொடரில், அவர் ஒரு சாதாரண ஆசிரியராக இருந்தார்.

வோலோடிமிர் செலென்ஸ்கி, " Kvartal 95" என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவர். இந்த நிறுவனமானது பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சிகள், சிட்காம்கள்( sitcoms) மற்றும் திரைப்படங்களை உருவாக்கியதாக பரவலாக அறியப்படுகிறது.
வோலோடிமிர் செலென்ஸ்கி, கிவ்-ல் உள்ள தேசிய பொருளியல் பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டப் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் சட்டத்தை தொழிலாகத் தேர்வு செய்யவில்லை. அதன் மாற்றாக, அவர் நகைச்சுவை மற்றும் திரை உலகில் தனது வழியைத் தொடங்கி, இத்துறைகளில் அதிக கவனம் மற்றும் புகழ் பெற்றார்.
வோலோடிமிர் செலென்ஸ்கி, டிஜிட்டல் முயற்சிகளுக்கு ஆதரவளித்தவர். அவர் பொது சேவைகளை டிஜிட்டல் முறையில் மாற்றுவது மற்றும் transparency (திறந்த மற்றும் வெளிப்படையான) அரசாங்கத்தை உருவாக்குவது போன்ற முன்னெடுப்புகளை வலியுறுத்தி வந்தார்.
2018 ஆம் ஆண்டு ஜெலென்ஸ்கி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தபோது, பல விமர்சகர்கள் அவரை அனுபவமற்றவராகக் கருதினர் மற்றும் அவரது வாய்ப்புகளை குறைத்து மதிப்பிட்டனர். அவரது வெளியுலக அந்தஸ்து, கவர்ச்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு கருத்தமைப்புகள் அவருக்கு 2019-இல் 70%க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று, அதிபராக பெரும் வெற்றியைத் தந்தன.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு: Forbes Middle East report-படி, சமூக ஊடகங்களில் அவர் ஒரு கோடீஸ்வரர் என்று கூறப்பட்டாலும், Forbes உலக செல்வ பட்டியலில் இடம் பெறவில்லை. 2022 ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது அவரது சொத்து மதிப்பு சுமார் 20 மில்லியன் டாலர்கள் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
வோலோடிமிர் செலென்ஸ்கி, உக்ரைனில் சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு மாடி வீட்டை வைத்திருந்தார். அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு இந்த பிளாட் அவரது வருமானம் மிக்க இடமாக இருந்தது, 2019-இல், வோலோடிமிர் செலென்ஸ்கி இத்தாலி நாட்டின் Forte dei Marmi பகுதியில் சுமார் 4 மில்லியன் டாலருக்கு ஒரு அப்பார்ட்மெண்டை வாங்கினார். ஜெலென்ஸ்கி போன்ற ஒரு பதவியில் உள்ள நபருக்கு இது ஒரு முக்கியமான முதலீடு என்று கருதப்படுகிறது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டில், ஜெலென்ஸ்கி இந்த வில்லாவை விற்றார்.
உக்ரைன் அதிபராக ஜெலென்ஸ்கியின் சம்பளம்: ஜனாதிபதியாக, ஜெலென்ஸ்கி அதிகாரப்பூர்வமாக சர்வதேச தரத்தின்படி ஒரு சாதாரண சம்பளத்தைப் பெறுகிறார். அவரது மாத ஊதியம் தோராயமாக 28,000 உக்ரேனிய ஹ்ரிவ்னியாக்கள் (சுமார் $930 அமெரிக்க டாலர்) ஆகும். 2019 ஆம் ஆண்டு உக்ரைனின் அதிபரானதிலிருந்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொத்துமதிப்பு கணிசமான ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகியது. அவர் அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் மிகவும் வெற்றிகரமான நகைச்சுவை நடிகர் மற்றும் தொழிலதிபராக இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரது நிதிநிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications