பணக்காரர்களின் சொத்து மதிப்பும், ஆடம்பர சந்தையும் எப்போது செழிப்புடனே உள்ளது. உதாரணமாக கொரோனா தொற்று காலத்தில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது. இதேபோல் கொரோனாவுக்கு பின்பு முதன் முதலில் வர்த்தக சரிவில் இருந்து மீண்டது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்தது ஆடம்பர சந்தை தான்.
இந்தியாவில் ஆடம்பரத்திற்கும், ராஜ வாழ்க்கைக்கும் பெயர்போன முகேஷ் அம்பானி குடும்பத்தின் வாழ்க்கை முறை குறித்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும் வியப்பில் ஆழ்த்துகிறது. 100க்கும் அதிகமாக ஆடம்பர கார்கள், பல கோடி மதிப்பிலான புடவைகள், 400, 600 கோடி ரூபாய்க்கு நகைகள், 15000 கோடிக்கு வீடு, சமையல்காரர்-க்கு மாதம் 2 லட்சம் வரையில் சம்பளம்..

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், தற்போது இந்த அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு விஷயம் அம்பானி குடும்பம் குறித்து டிரெண்டாகி வருகிறது. பிரபலங்களின் பர்சனல் வாழ்க்கை, லைப்ஸ்டைல் பற்றி தெரிந்துக்கொள்ள யாருக்கு தான் பிடிக்காது..?
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர்போன முகேஷ் அம்பானி - நீதா அம்பானி குடும்பம் தினமும் குடிக்கும் ஒரு டீ கப் விலை என்ன தெரியுமா..? முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தங்களுடைய சொத்து மதிப்புக்கு இணங்க அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்களும் அமைந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய காதல் மனைவி நீதா அம்பானி தினமும் குடிக்கும் டீ கப் விலை ஒன்று 3 லட்சமாம். அடப்பாவிகளா என்னுடைய 3 அல்லது 4 வருட கல்லூரி கட்டணமே 3 லட்சம் தான் என பலர் புலம்புவது கேட்கிறது.. என்ன செய்ய அவர்களுடைய பணம், அவர்களுடைய வாழ்க்கை. சரி டீ கப் அப்படி என்ன ஸ்பெஷல்.

ஜப்பான் நாட்டின் மிகவும் பழமையான கிராக்கரி நிறுவனமான நோரிடெக் (Noritek) தயாரித்த கோப்பையில் நீதா அம்பானி டீ குடிக்கிறார். இந்த சீன நாட்டின் பழங்கால தொன்மையான டிசைன்-ஐ கொண்ட இந்த டீ கப் செட்-ல் ஒவ்வொரு கோப்பையும் ரூ.3 லட்சத்திற்கும் மேல் விலை கொண்டது. பழங்கால ஜப்பானிய கிராக்கரி பிராண்டின் மொத்த டீ கப் செட் மற்றும் டைனிங் செட் விலை ரூ.1.5 கோடிக்கு மேல்.
ஒவ்வொரு டீ கப் உலகின் மிகச்சிறந்த சீனாவின் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது, மேலும் தங்கம் மற்றும் பிளாட்டினம் பூசப்பட்டிருக்கும் என Noritek இணைய தளத்திலேயே தெரிவிக்கப்பட்டு உள்ளது. விருப்பப்பட்டால் நீங்களும் இந்த பிராண்டின் டீ கப்-களை வாங்கலாம் இதை கிளிக் பண்ணுங்க
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications