எலக்ட்ரிக் வாகனங்கள் (EVகள்) உற்பத்தி செய்வதற்கு, உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் ஊக்கத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அடுத்த நிதியாண்டில் நீட்டிக்க மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த ஊக்கத் திட்டத்திற்குச் சேவையான மூலதனத்தை விரிவுபடுத்தத் தனது இடைக்காலப் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு மானியத்தை ஏற்கனவே குறைத்த நிலையில் தற்போது மொத்தமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாகக் கடந்த வாரம் தகவல் வெளியானது. இதனால் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் விற்பனை மந்தமடையும் என எண்ணினர்.

மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள எலக்ட்ரிக் இருசக்கரங்களுக்கான மானியம் அடுத்தச் சில வாரத்தில் முடிய உள்ள வேளையில், மீண்டும் மானியத்தை அறிவிக்கும் திட்டத்தில் அரசு இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், சிறிய இடைவெளியில் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க FAME எனப்படும் வேகமான தத்தெடுப்பு மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி (FAME) திட்டத்தின் மூன்றாவது பதிப்பு நிதி அமைச்சகத்திடம் இருந்து இன்னும் ஒப்புதல் பெறாத நிலையில், மத்திய நிதியமைச்சகம் தற்போதைய மானிய திட்டத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் FAME II திட்டத்திற்கான கூடுதல் நிதியை வாக்கெடுப்பு மூலம் பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பழைய திட்டத்தின் நீட்டிப்புக்கு, புதிய திட்டத்திற்குத் தேவைப்படுவது போல் பல்வேறு ஒப்புதல்கள் தேவைப்படாது. மேலும் இடைக்காலப் பட்ஜெட் மற்றும் இடைப்பட்ட சந்தை வேகத்தைத் தக்கவைக்க இது உதவும்.
ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் அடுத்த ஆண்டு இடைக்காலப் பட்ஜெட் திட்டங்கள் வாக்கெடுப்பு மூலம் நடைபெற உள்ளது. மத்திய பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டு வரும் வேளையில், இந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6வது முறையாகப் பட்ஜெட்டை இடைக்காலப் பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்கிறார்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (EV) பல நன்மைகளைக் கொண்டுள்ளன, அவை என்ன?:
அமைதியான சுற்றுச் சுழல்: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் பூஜ்ஜிய உமிழ்வைக் கொண்டு உள்ளது. அவை பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட அதிகத் திறன் கொண்டவை, அதிக ஆற்றல் மாற்று விகிதம் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடியவை.
செலவு குறைவு: பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட EVகள் குறைவான இயக்க மற்றும் பராமரிப்பு செலவுகளைக் கொண்டுள்ளன. இதுமட்டுமா குறைந்த பதிவு கட்டணம் மற்றும் காப்பீட்டு கட்டணமும் கொண்டது.
வசதியானவை: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு எளிதானது மற்றும் அமைதியாக இயங்கக் கூடியவை. மேலும் வீட்டிலேயே சார்ஜ் செய்யலாம்.
நெரிசலான நகரங்களுக்கு நல்லது: அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நகர்ப்புறங்களுக்கு EVகள் ஒரு நல்ல தேர்வாகும்.
அரசு மானியங்கள்: இந்திய அரசாங்கம் EVகளை வாங்குவதற்கு மானியங்கள் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்குகிறது, இது முன்கூட்டிய செலவைக் குறைக்கும்.


Click it and Unblock the Notifications