டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடனே பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார். இந்தியாவில் இருந்து இறக்குதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரி விதித்தார். பின்னர் ஜூலை 9ஆம் தேதி வரை வரி விதிப்பு நடவடிக்கையை தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
பல கட்ட பேச்சுவார்த்தை: இந்த சூழலில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்றன. ஜூலை 9ஆம் தேதிக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கக்கூடிய சூழலில் முதல் கட்டமாக ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என மத்திய அரசு தீவிரம் காட்டியது. இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் அமெரிக்காவிற்கும் அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிற்கும் வருகை தந்து பேச்சு வார்த்தைகளை நடத்தினர்.

48 மணி நேரத்தில் ஒப்பந்தம்: இந்த சூழலில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 48 மணி நேரங்களுக்குள் கையெழுத்தாகிவிடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த வாரம் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட இந்தியாவை சேர்ந்த அதிகாரிகள் குழு தங்களுடைய பயணத்தை நீட்டித்து இருக்கிறது. இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தீவிர ஆலோசனை: அமெரிக்காவை பொறுத்தவரை தங்களுடைய வேளாண் மற்றும் பால் பொருட்கள் , மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் உள்ளிட்டவற்றை இந்திய சந்தைக்குள் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது . குறிப்பிட்ட சில விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்த நிலையில் அவற்றை சரி செய்வது தொடர்பாகத்தான் கடந்த சில நாட்களாக தீவிரமான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன.
இடைக்கால ஒப்பந்தம்: தற்போதைக்கு ஒரு இடைக்கால ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டு அதன் பின்னர் இந்த விவகாரங்கள் குறித்து விரிவாக பேசி ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வரலாம் என்றும், பின்னர் ஒரு முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம் என்றும் இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை காலணிகள் ,துணிமணிகள், தோல் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அரசாங்கம் குறைந்தபட்ச வரியை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
டிரம்ப் கருத்து: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகிவிட்டால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக போகிறது என்ற தகவலை தெரிவித்து இருந்தார் .
ஜூலை 9ஆம் தேதி கெடு: இது ஒரு வித்தியாசமான ஒப்பந்தமாக இருக்கப் போகிறது என்றும் அமெரிக்க பொருட்கள் இந்திய சந்தையில் போட்டியிடுவதற்கான ஒரு வாய்ப்பினை உருவாக்கும் ஒப்பந்தமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். குறைந்த வரி விகிதங்கள் இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்திருந்தார். ஜூலை 9ஆம் தேதிக்குள் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அரசாங்கம் 26 சதவீத இறக்குமதி வரியை விதிக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications