BSNL-க்கு ரூ.1.5 கோடி நிலுவை தொகை.. தமிழ்நாட்டின் 4000 பள்ளிகளில் இணைய வசதி பாதிக்கப்பட வாய்ப்பு!

மாநில அரசு பள்ளிகள் முழுவதிலும் தற்போது ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஹைடெக் லேப்களை அரசு அமைத்து வருகிறது. இந்நிலையில் 3700-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் விரைவில் இணைய இணைப்பு செயலிழக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் உயர்தர ஆய்வகங்களின் மூலம் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசு வைஃபை வசதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வைஃபை வசதியை பயன்படுத்தும் பள்ளிகளில் BSNL நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1.5 கோடி நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக இருக்கும் 6223 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான.. அதாவது 3700 அரசு பள்ளிகள் கடந்த 2 முதல் 3 மாதங்களாக இணைய இணைப்புக்கு கட்டணம் செலுத்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் நிதி பற்றாக்குறை என்று கூறப்படுகிறது.

 BSNL-க்கு ரூ.1.5 கோடி நிலுவை தொகை.. தமிழ்நாட்டின் 4000 பள்ளிகளில் இணைய வசதி பாதிக்கப்பட வாய்ப்பு!

மேலும் வைஃபை வசதி பயன்படுத்தப்படும் 3700 பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேப்களில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் "ஃபைபர் டு தி ஹோம்" இணைப்புகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் BSNL தனது கடிதத்தில் சனிக்கிழமைக்குள் பள்ளிகள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் சேவைகள் நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது.

இந்நிலையில் மே மாதம் முதல் வாரத்தில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மாநில அரசு BSNL நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகளில் வழங்கப்படும் இணைய வேகத்தை 5 முதல் 6 Mbps ஸ்பீடில் இருந்து 100 Mbps-ஆக உயர்த்த இருப்பதாக அறிவித்தது. இந்த வசதி ஏற்கனவே 6,223 பள்ளிகளில் 5907 பள்ளிகளில் அதிவேக இன்டர்நெட் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளுக்கும் அந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில பள்ளிகளுக்கு மட்டும் வேறு சில டெலிகாம் ஆப்ரேட்டர்களை பயன்படுத்தி இணைய வசதி பெரும் அனுமதி வழங்கப்பட்டது. ஏனெனில் BSNL நிறுவனம் அனைத்து பகுதிகளிலும் இல்லை என்ற காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மல்டிமீடியா மூலம் கற்றலை மேம்படுத்த பயன்படுத்தப்படும் ஹைடெக் ஆய்வகங்களின் செயல்பாட்டிற்கு கண்டிப்பாக நல்ல இன்டர்நெட் வசதி அவசியம். இந்த ஆய்வகங்கள் மாணவர்களுக்கான மொழி வகுப்புகள், ப்ரோக்ராம்கள் போன்றவற்றை வழங்க பெரிதும் உதவி வருகின்றன.

சில தலைமை ஆசிரியர்கள், அரசு இதற்கு முன்பு 3 முதல் 5 Mbps இன்டர்நெட் வசதிக்கு ஆண்டுக்கு சுமார் 20,000 வழங்கியதாகவும் தற்போது அரசு மாதத்திற்கு 1500 மட்டுமே கட்டணமாக வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளனர். அதுவும் இந்த தொகை 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியிடப்படுகிறது. இதனால் பல தலைமையாசிரியர்கள் தங்கள் பணத்திலிருந்து அல்லது பள்ளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு கட்டணங்களை பயன்படுத்தி இணைய வசதிக்கு பணம் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு குறைந்த பராமரிப்பு கட்டணங்களை ஒதுக்கப்படுகிறது என்று தர்மபுரியை சேர்ந்த ஒரு தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளின் நிதிச் சுமையை குறைக்கவும், கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கவும் அரசு மின்சாரம் மற்றும் இணைய கட்டணங்களை நேரடியாக செலுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் வரையிலும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு செப்டம்பர் வரையிலுமான இணைய கட்டணத்தை விடுவிக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+