இன்ட்ராடே டிரேடிங் VS பொசிஷனல் டிரேடிங்... பங்குச் சந்தையில் நீங்க எப்படி?..

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நமது செல்வத்தை பெருக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். தினமும் பங்குச் சந்தையில் பல லட்சம் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி விற்கிறார்கள். பொதுவாக முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள். அதேசமயம் பங்குச் சந்தையில் வர்த்தகர்களின் அணுகுமுறை வித்தியாசமானது. பொதுவாக ஒருவர் வர்த்தகராக பங்குச் சந்தையில் செயல்படுகிறார் என்றால், இன்ட்ராடே மற்றும் பொசிஷனல் என இரண்டு அணுகுமுறையில் முதலீடு செய்து வர்த்தகம் செய்வார்.

இன்ட்ராடே டிரேடிங்

இன்ட்ராடே டிரேடிங் என்பது ஒரு வர்த்தக நாளுக்குள் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வதாகும். ஒரு பங்கின் விலையில் ஏற்படும் சிறிய ஏற்ற இறக்கத்தில் லாபம் ஈட்டும் நோக்கில் வாங்க மற்றும் விற்பனை ஆர்டர்களை வர்த்தகர்கள் செயல்படுத்துகிறார்கள். இன்ட்ராடே வர்த்தகத்தில் ஈடுபட்டால் சந்தை நிறைவடைவதற்குள் வர்த்தகர்கள் அனைத்து பொசிஷன்ஸ்களையும் முடித்து விட வேண்டும். வர்த்தகர் செய்யவில்லை என்றால் தரகர்கள் தானாகவே அவற்றை முடித்து விடுவார்கள்.

இன்ட்ராடே டிரேடிங்  VS பொசிஷனல் டிரேடிங்... பங்குச் சந்தையில் நீங்க எப்படி?..

இன்ட்ராடே சிறப்பம்சங்கள்

வர்த்தகர்கள் குறைந்தபட்ச மூலதனத்துடன் பெரிய தொகையிலான ஆர்டர்களை எடுக்கலாம். அதற்கு தகுந்த மாதிரி லாபமோ அல்லது நஷ்டமோ பெரிதாக இருக்கும். வர்த்தகங்கள் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்பதால், இன்ட்ராடே வர்த்தகத்தில் சந்தையின் ஏற்ற இறக்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். பங்கு விலைகள் மற்றும் தொழில்நுட்ப இன்டிகேட்டர்களை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். லாபமோ அல்லது நஷ்டமோ ஒரே நாளுக்குள் தெரிந்துவிடும்.

யாருக்கு பொருத்தமானது

சந்தைகளை கண்காணிப்பதில் தங்களது முழு நேரத்தையும் செலவிட முடியும் என்ற வர்த்தகர்களுக்கு இன்ட்ராடே டிரேடிங் சரியானது. மேலும், குறைந்த நேரத்தில் விரைவான லாபத்திற்காக அதிக ரிஸ்க் எடுக்க விரும்பும் வர்த்தகர்களுக்கு இது பொருத்தமானது.

பொசிஷனல் டிரேடிங்

இன்ட்ராடே டிரேடிங்குக்கு முற்றிலும் மாறுபட்டது பொசிஷனல் டிரேடிங். மீனுக்காக காத்திருக்கும் கொக்குபோல் ரொம்ப பொறுமையாக காத்திருக்க வேண்டும். பொசிஷனல் டிரேடிங்கில் வர்த்தகர்கள் பங்குகளை சில நாட்கள் முதல் பல மாதங்கள் வரை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க முடியும். இந்த உத்தி வர்த்தகர்கள் தினசரி சந்தை ஏற்ற இறக்கங்களின் அழுத்தம் இல்லாமல் நீண்ட போக்குகளில் பயணம் செய்ய உதவுகிறது.

பொசிஷனல் டிரேடிங் சிறப்பம்சங்கள்

சந்தை நிலவரங்கள் மற்றும் உத்தியை பொறுத்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பங்குகளை வர்த்தகர்கள் வைத்திருக்கலாம்.
இன்ட்ராடே வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, பொசிஷனல் வர்த்தகத்தை பொறுத்தவரை வர்த்தகங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
பங்குகளை வைத்திருப்பதற்கு அதிக மார்ஜின் தேவைப்படும்.
இன்ட்ராடே வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, பொசிஷனல் வர்த்தகத்தில் ஆபத்து மற்றும் லாப வரம்பு பெரிய அளவில் உள்ளது.

யாருக்கு பொருத்தமானது?

நாள் முழுவதும் சந்தையை தீவிரமாக கண்காணிக்க முடியாத, ஆனால் பங்கு விலை நகர்வுகளை பயன்படுத்தி கொள்ள விரும்பும் வர்த்தகர்களுக்கு பொசிஷனல் வர்த்தகம் சரியாக இருக்கும்.
மிதமான ரிஸ்க் எடுக்க விரும்புவர்களுக்கும், அதிக மூலதன முதலீடு வைத்திருப்பவர்களுக்கும் இது சிறந்தது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+