புதிய ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க் அறிமுகம்!. விலை இவ்வளவு கம்மியா?. ரிலையன்ஸின் புதிய முயற்சி!

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பிராண்டான SIL Food India நிறுவனத்தை கடந்த ஜனவரி 22ம் தேதி கையகப்படுத்தியது. SIL Food நிறுவனம் சமையல் பேஸ்ட்கள், ஜாம்கள், மயோனைஸ், பேக் செய்யப்பட்ட பீன்ஸ் மற்றும் சீன சாஸ்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து வழங்கும் நிறுவனம் ஆகும். இதுமட்டுமல்லாமல், ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் ராவல்கான் மற்றும் டோஃபிமேன் மிட்டாய் , காம்பா குளிர்பானங்கள், ரஸ்கிக் பானங்கள், சோசியோ, லோட்டஸ் சாக்லேட்டுகள் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் தற்போது, ரிலையன்ஸ் நிறுவனம் தனது புதிய "ஸ்பின்னர்" எனப்படும் ஸ்போர்ட்ஸ் குளிர்பானத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த குளிர்பானம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரிலையன்ஸ் உடன் இணைந்து இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், அறிமுகம் செய்து வைத்தார். இந்த ட்ரிங்ஸுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட முன்னணி ஐபிஎல் அணிகளும் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளன.

புதிய ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க் அறிமுகம்!. விலை இவ்வளவு கம்மியா?. ரிலையன்ஸின் புதிய முயற்சி!

ஆரஞ்சு, லெமன் மற்றும் நைட்ரோ ப்ளூ ஆகிய மூன்று வகையில் தயாரிக்கப்படும் இந்த ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ்,அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவு வரை சந்தையில் மதிப்பு பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்பானம் விளையாட்டு வீரர்களை நீரேற்றத்துடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். கோடைக்காலம் தொடங்கும் முன்பே, நாடு முழுவதும், குறிப்பாக வட மாநிலங்களில் வெப்பநிலை ஏற்கனவே இயல்பை விட 6-8 டிகிரி அதிகமாக இருப்பதால், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் கூலிங் டால்க் போன்ற கோடைகால தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே,இந்த குளிர்பானத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நோக்கில் ரிலையன்ஸ் நிறுவன்ம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

"ஸ்பின்னர்"அறிமுக நிகழ்வில் பேசிய முத்தையா முரளிதரன், "ஒரு விளையாட்டு வீரர் என்கிற முறையில் இந்த ஹைட்ரேஷன் குளிர்பானத்தை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன். விளையாட்டு வீரர்களுக்கு ஹைட்ரேஷன் மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்த ஸ்பின்னர் குளிர்பானம் விளையாட்டு துறையில் கேம் சேஞ்சராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியர்கள் எந்த விளையாட்டில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த ஸ்பின்னர் குளிர்பானம் நிச்சயமாக உத்வேகம் அளிக்கும்" என்று கூறினார்.

ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட்டின் தலைமை இயக்க அதிகாரி கேதன் மோடி கூறுகையில், "ரிலையன்ஸ் நிறுவனத்தில், ஒவ்வொரு இந்தியரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் தரமான தயாரிப்புகளை அணுக தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி அல்லது நீரேற்றத்துடன் இருக்க விரும்புபவராக இருந்தாலும் சரி, அனைவரும் அருந்தக்கூடிய மலிவு மற்றும் பயனுள்ள நீரேற்ற தீர்வான ஸ்பின்னர் குளிர்பானத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று கூறினார், .

மேலும், "இந்தியாவில் தற்போதைய விளையாட்டு பானங்கள் சந்தையின் மதிப்பு சுமார் ரூ.240 கோடி ஆகும். ஸ்பின்னர் போன்ற பானங்கள், சந்தை விலை நிர்ணய உத்திகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+