ஒருசில ஆயிரம் மட்டுமே முதலீடு.. கோடிகளில் வருமானம்.. அப்படி என்ன பிசினஸ்?

என்னதான் ஐடி துறையில் மிகப்பெரிய வேலையிலிருந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் சொந்த தொழிலுக்கு ஈடாகாது என்று நமது முன்னோர்கள் கூறி வருகின்றனர்.

சொந்த தொழிலில் சுதந்திரம் இருக்கும் என்பதும், முழு ஈடுபாட்டுடன் தொழிலை செய்தால் கோடிக்கணக்கில் வருமானம் பெறும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் தெரிந்ததே.

தற்கால இளைஞர்கள் பலரும் வேலைக்கு செல்வதை விட சொந்த தொழிலில் ஈடுபடுவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிசினஸ் ஒன்று குறித்து தற்போது பார்ப்போம்.

சொந்த தொழில்

சொந்த தொழில்

சொந்த தொழிலை வீட்டில் இருந்தே தொடங்கலாம் என்ற வாய்ப்புகள் தற்போதைய டிஜிட்டல் உலகில் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உங்களுக்கு டிஜிட்டல் டிசைனிங் தெரிந்திருந்தால் வீட்டிலிருந்து கொண்டே ஒரு சில ஆயிரம் மட்டுமே செலவு செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் ஹோர்டிங் பிசினஸ்

டிஜிட்டல் ஹோர்டிங் பிசினஸ்

டிஜிட்டல் ஹோர்டிங் பிசினஸ் என்று கூறப்படும் இந்த பிசினஸ் தொடங்க உங்களுக்கு அதிகம் செலவாகாது. தனியாக இடம், அலுவலகம் தேவையில்லை. வீட்டிலிருந்தே இந்த தொழிலை செய்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனிங் மற்றும் டிஜிட்டல் டிசைனிங் குறித்த அறிவு இருந்தால் போதும். நீங்கள் உடனே ஒரு டிஜிட்டல் ஹோர்டிங் பிசினஸை தொடங்கலாம்.

ஆன்லைன் தளங்கள்

ஆன்லைன் தளங்கள்

இந்த பிசினஸை தொடங்கிய உடன் பல ஆன்லைன் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உங்கள் திறமையை சொல்லி ஆர்டர்கள் கேட்கலாம். அதன்பின் அதில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபித்தால் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

விளம்பரம்

அதுமட்டுமின்றி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் டிஜிட்டல் ஹோர்டிங் பிஸினஸ் குறித்து விளம்பரம் செய்து பல்வேறு ஆர்டர்களை பெறலாம். டிஜிட்டல் ஹோர்டிங் பிசினஸில் தற்போது பல இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் குறைவான வருமானம் கிடைத்தாலும் உங்களுடைய டிசைனிங் வாடிக்கையாளர்களுக்கு பிடித்துவிட்டால் அதன்பின் உங்களுக்கு அடுத்தடுத்து ஆர்டர்கள் குவியும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

முழு ஈடுபாடு

முழு ஈடுபாடு

எந்த பிசினஸை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பது முக்கியம். அந்த வகையில் டிஜிட்டல் ஹோர்டிங் துறையில் உங்கள் திறமை முழுவதையும் நீங்கள் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் வெளிப்படுத்தினால் நிச்சயம் உங்களுக்கு ஆர்டர்கள் குவியும் என்பதும் அதன் மூலம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையதளம்

இணையதளம்

இந்த டிஜிட்டல் ஹோர்டிங் பிசினஸில் ஓரளவு முன்னேறி விட்டால் உங்களுக்கு என ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் நீங்கள் டிசைன் செய்த டிசைன்களை காட்சிப்படுத்தலாம். உங்களுக்கு ஆர்டர் கொடுக்க வரும் வாடிக்கையாளர்கள் இந்த டிசைனை பார்த்து திருப்தி அடைந்து உடனே ஆர்டர் கொடுப்பார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+