ரூ.1.79 லட்சம் முதலீட்டில் ஆண்டுக்கு ரூ.10.86 லாபம் பார்க்கலாம்.. அப்படி என்ன தொழில் தெரியுமா?

குறைந்த முதலீட்டில் பாதுகாப்பான தொழில் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. பசையிட்ட பேப்பர் டேப் தயாரிப்பு தொழில் அதில் ஒன்று. ரூ.1.79 லட்சம் முதலீடு செய்தால் இந்தத் தொழிலில் ஆண்டுக்கு ரூ.114.60 லட்சம் விற்றுமுதல் கிடைக்கும். பசையிடப்பட்ட பேப்பர் டேப் என்பது அட்டைப்பெட்டிகள் மற்றும் பார்சல்களை ஒட்டும் டேப்கள் ஆகும். இதில் பல வகைகள் உள்ளன. இந்த பேக்கேஜிங் டேப்கள் பொருட்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை தருகிறது.

இந்த டேப்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானவை. அட்டைப் பெட்டிகளில் சரக்குகளை அடைத்து அழகாக ஒட்டிவிடலாம். போக்குவரத்துக்கு ஏதுவாக இருக்கும்.
பேக்கேஜிங் துறையில் இந்த பசையிடப்பட்ட பேப்பர் டேப்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.

ரூ.1.79 லட்சம் முதலீட்டில் ஆண்டுக்கு ரூ.10.86 லாபம் பார்க்கலாம்.. அப்படி என்ன தொழில் தெரியுமா?

பார்மஸி, காஸ்மடிக்ஸ், உணவு பிராசஸிங் போன்ற துறைகளில் கச்சிதமாக பொருட்களை அடைத்து அனுப்புவதற்கு இந்த டேப்புகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. பசையிடப்பட்ட பேப்பர் டேப் தயாரிப்பு தொழிலைத் தொடங்குவதற்கு அரசு உதவி செய்கிறது. மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்துக்கு விண்ணப்பித்து இந்தத் தொழிலை செய்யலாம்.

தருண் பிரிவின்கீழ் ரூ.10 லட்சம் வரை முத்ரா கடன்கள் வழங்கப்படுகிறது. இந்தத் தொழிலை செய்ய நினைத்தால் முத்ரா கடன் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்புங்கள். பசையிடப்பட்ட பேப்பர் டேப் தொழில் தொடங்குவது தொடர்பாக காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் ஒரு அறிக்கையைத் தயாரித்துள்ளது. அதன்படி, ரூ.1.79 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். தொழில் மூலதனமாக ரூ.4 லட்சம் வேண்டும்.

ரூ.1.79 லட்சம் முதலீட்டில் ஆண்டுக்கு ரூ.10.86 லாபம் பார்க்கலாம்.. அப்படி என்ன தொழில் தெரியுமா?

உங்கள் பகுதியில் தயாரிப்பு ஆலையை அமைக்க வாடகைக்கு இடம் தேவை. சொந்தமாக இடம் இருந்தால் நல்லது. இந்தத் தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.114.60 லட்சம் விற்றுமுதல் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பசையிடப்பட்ட பேப்பர் டேப்- திட்டச் செலவு
நிலம்- சொந்தம் /வாடகை
கட்டடம் /ஷெட் 2000 சதுர அடி சொந்தம்/ வாடகை
ஆலை & இயந்திரம்- ரூ.12.60 லட்சம்
பர்னிச்சர்- ரூ.85,000
தொழில் மூலதனம்- ரூ.4.44 லட்சம்
மொத்தம்-ரூ.17.89 லட்சம்
நிதி ஆதாரம்:
சொந்த முதலீடு- ரூ. 1.79 லட்சம்
டெர்ம் லோன்- ரூ 12.11 லட்சம்
தொழில் முதலீடு- ரூ 4 லட்சம்
மொத்தம்- ரூ. 17.89 லட்சம்

பசையிடப்பட்ட பேப்பர் டேப் தொழிலில் ஆண்டுக்கு நீங்கள் ரூ.114.60 லட்சம் டர்ன்ஓவர் பார்க்கலாம். உங்களுக்கு தெரிந்த கடைகள்,சூப்பர் மார்க்கெட்டில் நீங்கள் தயாரித்த டேப்புகளை விற்கலாம். ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம்.

ஐந்தாண்டுகள் இந்தத் தொழிலை தொடர்ந்து செய்துவந்தால் கிடைக்கும் லாபம் குறித்து காதி மற்றும் கிராமத் தொழில் ஆணயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி முதல் ஆண்டில் நிகர லாபமாக ரூ.1.03 லட்சம் பெறுவீர்கள்.
ரூ.3.21 லட்சம் இரண்டாமாண்டில் கிடைக்கும்.

மூன்றாவது ஆண்டில் நிகர லாபம் ரூ.5.89 லட்சம் கிடைக்கும். நான்காவது ஆண்டில் ரூ.8.24 லட்சமும், ஐந்தாவது ஆண்டில் ரூ. 10.86 லட்சமும் லாபமாகக் கிடைக்கும்.

Story written by: Jayachandran

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+