தினசரி ரூ.74 முதலீடு.. வயதான காலத்தில் ரூ.60 லட்சத்திற்கு மேல் இருப்பு.. பென்சன் ரூ.27,000 ..!

முதுமை காலத்தில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும். அப்போதும் வேலை வேலை என அலைந்து செல்லாமல், பேர குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கும்.

ஆனால் எத்தனை பேர் இன்று, அப்படி குடும்பம் பேரக் குழந்தைகளோடு, எந்தவித நிதி பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்றனர் என்றால் அது கேள்விக்குறிதான்.

ஆனால் இப்படியெல்லாம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்க, உங்கள் கையில் நிதி ரீதியிலான பிரச்சனை இல்லாமல் இருந்தாலே, ஓரளவு பிரச்சனைகளை கையாள முடியும். ஆக இன்றில் இருந்தே உங்களது ஓய்வுகாலத்தினை பற்றியும் யோசிக்கலாம். ஓய்வுகாலத்தில் மாத மாதம் கொஞ்சம் பென்சன், கையில் கொஞ்சம் இருப்பு என இருந்தால், உங்களால் பிரச்சனைகளை சற்று தவிர்க்க முடியும். உங்களது முதுமை காலத்தினையும் சந்தோஷமாக கழிக்க முடியும்.

என்ன திட்டம் அது?

என்ன திட்டம் அது?

அந்த வகையில் வயதானர்களுக்கு ஏற்ற ஒரு முதலீட்டு திட்டத்தினை பற்றித் தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். தேசிய ஓய்வூதிய திட்டம், இது தனியார் துறை ஊழியர்கள், சுய தொழில் செய்வபர்கள், குடும்ப தலைவிகள் என பலருக்கும் தங்களின் ஓய்வுகாலத்தில் பென்ஷன் இல்லையே என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஆதங்கத்தினை போக்க கொண்டு வரப்பட்ட திட்டம் இது. மொத்தத்தில் வயதான காலத்தில் கவலையில்லாமல் வாழ கொண்டு வரப்பட்ட அஞ்சலக திட்டம்.

பென்சன் கிடைக்கும்

பென்சன் கிடைக்கும்

இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஓய்வுகாலத்தில் மிகப்பெரிய கார்பஸ் தொகையினையும் பெற முடியும். மாத மாதம் பென்சன் தொகையையும் பெற முடியும். மொத்தத்தில் வயதான காலத்தினை எந்தவித நிதி ரீதியிலான பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக கழிக்க முடியும், ஏனெனில் இந்த திட்டத்தில் முதிர்வுக்கு பிறகு மாதம் மாதம் பென்சன் பெற்றும் கொள்ளலாம். மிகப்பெரிய தொகையினையும் பெற்றுக் கொள்ளலாம்.

தினசரி ரூ.74 முதலீடு

தினசரி ரூ.74 முதலீடு

இந்த திட்டத்தில் தினசரி 74 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் நீங்கள் ஓய்வுபெறும்போது இந்த திட்டத்தில் 1 கோடி ரூபாய் உங்களுக்கு கிடைக்கலாம். தற்போதைய காலகட்டத்தில் தினசரி 74 ரூபாய் என்பது பலருக்கும் மிகப்பெரிய தொகை அல்ல எனலாம், முடியாதவர்கள் இதனிலும் குறைத்தும் செய்யலாம். கார்பஸ் தொகையானது குறைவாக இருக்கும்.

எங்கு முதலீடு செய்யலாம்?

எங்கு முதலீடு செய்யலாம்?

இந்த திட்டம் பங்கு சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு திட்டம் என்பதால், லாபகரமானதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்படும் நிதியானது ஈக்விட்டி, கடன் பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். மேலும் இந்த முதலீட்டில் எங்கு எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம்.

எதில்? எவ்வளவு?

எதில்? எவ்வளவு?

இந்த திட்டத்தில் வழக்கமாக 75% வரையில் ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம். இதனால் இந்த திட்டமானது அரசின் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் இபிஎஃப்பினை வருவாய் அதிகம் பெற வாய்ப்புகள் அதிகம். ஆக இந்த திட்டத்தின் மூலம் எளிதில் உங்கள் கார்ப்பஸ் இலக்கினையும் அடைய முடியும்.

கோடி ரூபாய்க்கு அதிபதி

கோடி ரூபாய்க்கு அதிபதி

உதாரணத்திற்கு உங்களுக்கு 20 வயது என வைத்துக் கொண்டால், நீங்கள் தினசரி 74 ரூபாய் வீதம், மாதம் 2,220 ரூபாய் முதலீடு செய்வீர்கள். வருடத்திற்கு சுமார் 9% லாபம் கிடைக்கிறது என வைத்துக் கொண்டால், 60 வயதில் கோடி ரூபாய்க்கு நீங்கள் அதிபதியாக இருக்க முடியும். உங்களது ஓய்வுகாலத்தில் இதன் மூலம் 1,04,70,475 ரூபாய் உங்களது கார்ப்பஸ் தொகையாக இருக்கும்.

பென்ஷன் எவ்வளவு?

பென்ஷன் எவ்வளவு?

எனினும் உங்கள் பென்ஷனை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானம் கிடைக்கும். ஆக வட்டி விகிதம் 8% என வைத்துக் கொண்டால் மாத மாதம் 27,921 ரூபாய் பென்சனாக பெறுவீர்கள். இதே 60% தொகையாக 62,82,285 லட்சம் ரூபாயினை தொகையாக எடுத்துக் கொள்ளலாம். மீதமிருக்கும் 41,88,190 ரூபாய் வருடாந்திர திட்டத்தில் வைத்திருப்பீர்கள். இந்த விகிதமானது ஆதித்யாபிர்லா கேப்பிட்டல் கால்குலேட்டர் அடிப்படையில் https://pensionfund.adityabirlacapital.com/nps-calculator கணக்கிடப்பட்டது.

30 வயதில் முதலீடு

30 வயதில் முதலீடு

இதே மற்றொரு நபர் மாதம் 5,400 ரூபாய் முதலீட்டினை, தனது 30 வயதில் செய்ய ஆரம்பிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்.

வயது - 30
முதலீடு மாதம் - ரூ.5,400
முதலீட்டு காலம் - 30 வருடம்
வருமானம் மதிப்பீடு - 9%
மொத்த முதலீடு - ரூ.19.44 லட்சம்
பென்ஷன் - ரூ.99,60,160

பென்சன் எவ்வளவு கிடைக்கும்?

பென்சன் எவ்வளவு கிடைக்கும்?

வருடாந்திர திட்டத்தில் - 40%
வட்டி மதிப்பீடு - 8%
பெறப்பட்ட மொத்த தொகை - ரூ.39,84,064
மாதாந்திர ஓய்வூதியம் - ரூ.26,560

முன்னதாக திட்டமிடுங்கள்

முன்னதாக திட்டமிடுங்கள்

ஆக நீங்கள் உங்களது இளம் வயதிலேயே சேமிக்க தொடங்கினால் பெரும் தொகையை பென்சனாக எளிதில் பெற முடியும். இதே உங்கள் வயதின் அடிப்படையில் இந்த தொகைகள் மாறுபடலாம். ஆக முடிந்த மட்டில் முன்னதாக திட்டமிட்டால், நாம் கணிசமான தொகையை நமது ஓய்வுகாலத்தில் பெற முடியும். இதே 35 வயதான ஒரு நபர் இந்த தொகைய பெற விரும்பினால் அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

வித்டிராவல் விதிமுறைகள்

வித்டிராவல் விதிமுறைகள்

என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றியில் முக்கியமானது எஸ்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்குட்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, முழு கார்பஸினையும் பெற முடியும். அதுவும் இந்த ஓய்வுதியம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் முழுமையாக பெற முடியும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+