AI முதலீடுகளின் உண்மையான செலவை மறைக்கிறதா தொழில்நுட்ப நிறுவனங்கள்.? நிபுணரின் அதிர்ச்சி எச்சரிக்கை.!

உலகில் ஆதிக்கம் செலுத்தும் மெட்டா, கூகுள் (ஆல்பபெட்) போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கோடிக் கணக்கில் செலவு செய்து, மிகப்பெரிய லாபங்களை அறிவித்து வருகின்றன. இந்த லாபங்களைப் பார்த்து முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால், 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியை முன்கூட்டியே கணித்து பிரபலமான முதலீட்டாளர் மைக்கேல் பர்ரி (Michael Burry), இந்த லாபங்கள் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அவரது சந்தேகம், இம்முறை கடன் அல்லது சந்தை பற்றியதல்ல; நிறுவனங்கள் கையாண்டுள்ள கணக்குப் பதிவியல் தந்திரங்கள் (Accounting Tricks) பற்றியதாகும்.

மைக்கேல் பர்ரி தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவில் ஒரு நுட்பமான நிதி முடிவை சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் வாங்கியுள்ள சேவையகங்கள், சிப்கள் மற்றும் பிற ஏ.ஐ. உள்கட்டமைப்புகளின் பயன்பாட்டு காலத்தை நீட்டித்துள்ளன. உதாரணமாக, ஒரு இயந்திரம் 4 ஆண்டுகள் மட்டுமே உழைக்கும் என்று முன்பு கணக்கிட்டிருந்தால், இப்போது அது ஐந்தரை ஆண்டுகள் உழைக்கும் என்று மாற்றிக் கணக்கிடுகின்றனர்.

AI முதலீடுகளின் உண்மையான செலவை மறைக்கிறதா தொழில்நுட்ப நிறுவனங்கள்.? நிபுணரின் அதிர்ச்சி எச்சரிக்கை.!

ஒரு சொத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும்போது, அந்த சொத்தின் வருடாந்திர தேய்மானச் செலவு (Depreciation Expense) குறைகிறது. இந்தத் தேய்மான செலவு என்பது ஒரு ரொக்கமில்லா செலவு ஆகும். இந்தச் செலவு குறைந்தால், நிறுவனத்தின் நிகர லாபம் (Net Income) காகிதத்தில் தானாகவே அதிகமாக தெரியும். ஆனால், நிறுவனத்தின் கையில் உள்ள உண்மையான பண வரத்து அதிகரித்திருக்காது. இந்த மாற்றம் சட்டப்படி தவறில்லை என்றாலும், இது நிறுவனத்தின் உண்மையான செலவு நிலையை மறைக்கிறது என்று பர்ரி எச்சரித்துள்ளார்.

மெட்டா எடுத்த முடிவின் பிரம்மாண்ட விளைவு : இந்த உத்திக்கு சிறந்த உதாரணம் மெட்டா நிறுவனம். மெட்டா, தனது கம்ப்யூட்டிங் கருவிகளின் பயன்பாட்டு காலத்தை 4-இல் இருந்து ஐந்தரை ஆண்டுகளாக மாற்றியதால், 2025 ஆம் ஆண்டில் அதன் தேய்மான செலவு சுமார் 3 பில்லியன் டாலர்கள் (பல ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்தது. மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆல்பபெட் போன்ற நிறுவனங்களும் இதேபோன்று தங்கள் வன்பொருளின் பயனுள்ள காலத்தை நீட்டித்துள்ளன. இந்த மாற்றம் உடனடியாக லாபங்களை அதிகரித்துக் காட்டியது. அதே சமயம், அமேசான் நிறுவனம் சிப்களின் விரைவான வளர்ச்சி காரணமாக, சேவையகங்களின் ஆயுட்காலத்தை 6-இல் இருந்து 5 ஆண்டாக குறைத்து, இதற்கு நேர்மாறாக செயல்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்த ஓராண்டில் ஏ.ஐ. உள்கட்டமைப்புக்காக 460 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட திட்டமிட்டுள்ளன. இந்தச் செலவுகள் அனைத்தும் விரைவாக மதிப்பை இழக்கக்கூடிய உபகரணங்களுக்காகவே செய்யப்படுகின்றன. வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் க்ளேசர் இது குறித்து எச்சரிக்கையில், இந்த ஏ.ஐ. முதலீடுகள் விரைவான வருமானத்தை தர தவறினால், இந்தக் கருவிகள் அனைத்தும் நிறுவனங்களுக்கு பயனற்ற சுமையாக மாறிவிடும்" என்று கூறுகிறார்.

ஆகவே, கணக்குப் பதிவியல் மாற்றங்கள் மூலம் லாபம் உயர்ந்தாலும், ஏ.ஐ. முதலீடுகள் உண்மையாகவே வருமானம் தருமா என்பதை பொறுத்தே இந்த நிறுவனங்களின் உண்மையான எதிர்காலம் அமையும் என்று நிதி நிபுணர்கள் கருதுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+