தாக்குபிடிக்க முடியாமல் விழுந்த சென்செக்ஸ்.. ஆனா நவம்பர் மாத துவக்கமே சம்பவம்.. சும்மாயில்ல ரூ.38 லட்சம் கோடி

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 1400 புள்ளிகள் வரையில் உயர்ந்திருந்த நிலையில் மாலை வர்த்தகம் முடியும் போது அதிகப்படியான தடுமாற்றம் காரணமாக வெறும் 772 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.

அமெரிக்க தேர்தலில் நடைபெற்ற மாற்றம், ஏஐ தொழில்நுட்பத்தில் முட்டுக்கட்டை, ஈரான் போர் முடிவு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

மேலும் இது அனைத்தும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை நேரத்தில் நடந்துள்ளது முதலீட்டுச் சந்தையில் முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது.

தாக்குபிடிக்க முடியாமல் விழுந்த சென்செக்ஸ்.. ஆனா நவம்பர் மாத துவக்கமே சம்பவம்.. சும்மாயில்ல ரூ.38 லட்சம் கோடி

நவம்பர் மாதம் முதல் 8 நாள் வர்த்தகத்தில் மட்டுமே சென்செக்ஸ் குறியீடு சுமார் 8000 புள்ளிகள் உயர்ந்த நிலையில், மொத்த சந்தை மதிப்பு 512 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 8 நாள் வர்த்தகத்தில் சந்தை மதிப்பு என்பது 38 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இன்றைய வர்த்தகத்திலும் அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்தியாவில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது மூலம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்துள்ளனர்.

இதன் வாயிலாகவே 1400 புள்ளிகள் உயர்வில் வர்த்தகமான சென்செக்ஸ் தற்போது வெறும் 770 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது, இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் profit booking அதிகமாக இருந்ததன் விளைவாகச் சந்தை சரிவு பாதைக்குச் சென்றுள்ளது.

நவம்பர் மாதத்தின் 9 நாட்களில் 53,739 கோடி ரூபாயை முதலீடு செய்தது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது, காரணம் அக்டோபர் முழுவதும் 34,843 கோடியும், செப்டம்பர் மாதத்தில் 35,861 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

நவம்பர் மாத 6 வர்த்தக நாட்களில் வந்த முதலீடுகள் மூலம் 2026ஆம் ஆண்டில் மொத்த FPI முதலீடுகளின் வெளியேற்றம் 2.41 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் திடீரென அன்னிய முதலீடுகள் குவிய அடிப்படை காரணமாக இருப்பது, சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் வாயிலாக மட்டுமே, ஏஐ முதலீட்டுக்காகவும், அமெரிக்கப் பத்திர முதலீட்டுக்காகவும் வெளியேறிய FPI முதலீட்டாளர்கள், இரண்டுமே பொய்துபோகவே தற்போது, ஏஐ துறை பாதிப்பு இல்லாத இந்தியச் சந்தையை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றனர்.

ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியில் நிலையற்ற தன்மை இருக்கும் வரையில் இந்தியச் சந்தையில் முதலீடுகள் தொடரும். இதேவேளையில், இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் போதும் நாட்டின் வளர்ச்சியில் எவ்விதமான தொய்வும் ஏற்படாதது பன்னாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+