மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா..அரண்டு போன அமெரிக்கா..ரூ3.5லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

ஒரு முறைக்கே தாங்கல, இங்கு இரண்டாவது முறையா? முடியாதுப்பா சாமி, போதும் போதும் என்கிற அளவுக்கு கொரோனா வைரஸ், அமெரிக்காவினை ஆட்டம் காண வைத்து விட்டது எனலாம்.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்கா தான்.

இந்த நிலையில் அங்கு கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க சந்தைகள் சரிவு

அமெரிக்க சந்தைகள் சரிவு

இதன் காரணமாக அமெரிக்கா பங்கு சந்தைகள் கடுமையான சரிவினை சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆரம்பத்திலேயே சரிவினை கண்டது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளில் 3.51 லட்சம் கோடி ரூபாயினை இழந்துள்ளனர்.

சந்தை மூலதனம்

சந்தை மூலதனம்

பிஎஸ்இ-யில் சந்தை மூலதனம் ஜூன் 11 அன்று 133.14 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இன்று அது 129.63 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது சென்செக்ஸ் 741 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 32,796 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 224 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (2.29 சதவீதம்) 9,677 ஆக உள்ளது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

இதே பங்கு சந்தை தரவுகளின் படி, வெளி நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நிகர விற்பனையாளர்களாக இருந்தனர். ஏனெனில் கடந்த வியாழக்கிழமையன்று 805.14 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 874.35 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

இதுவும் சரிவு தான்

இதுவும் சரிவு தான்

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 264.49 புள்ளிகள் மற்றும் 315.27 புள்ளிகளை இழந்தன. இதே இந்தஸ்இந்த் பேங்க் 6.05 சதவீதமும், ஓஎன்ஜிசி 5.06 சதவீதமும், கோட்டாக் பேங்க் 4.29 சதவீதமும், இதே என்டிபிசி 3.26% உள்ளிட்ட பல பங்குகள் சென்செக்ஸ் அதிக வீழ்ச்சி கண்டுள்ளன. இதே போல பிஎஸ்இ வங்கி குறியீடும் சரிவுடனும், பிஎஸ்இ ஆட்டோ மற்றும் நுகர்வோர் குறியீடுகளும் சரிவில் உள்ளன.

இது மிக மோசமான நாள்

இது மிக மோசமான நாள்

இதே பேங்க் நிஃப்டி அப்போது 675 புள்ளிகள் சரிந்து 19,870 ஆக உள்ளது. அதோடு பிஎஸ்இயில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றது. இதே அமெரிக்க பங்கு சந்தையான டவ் ஜோன்ஸ் 1,800 புள்ளிகள் வீழ்ச்சி கண்டும், இதே எஸ் & பி 500 5.9 சதவீதம் வீழ்ச்சி கண்டும் உள்ளது. இது மார்ச் மாதத்தில் இருந்து இது மிக மோசமான ஒரு நாளாக கருதப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+