பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி பொதுமக்களுக்கு பங்குகளை விற்பனை செய்து திரட்டுகின்றன. சமீபகாலமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓவில் களமிறங்கி வெற்றிகரமாக நிதி திரட்டி வருகின்றன. அதேசமயம், இந்த ஐபிஓவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு உண்மையில் லாபம் கிடைக்கிறதா என்றால் அது பெரிய கேள்விக்குறிதான். ஏனென்றால் கடந்த கால புள்ளிவிவரங்கள் கசப்பான உண்மையை வெளிப்படுத்தியுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் ஓலா எலக்ட்ரிக்,யாத்ரா,டெலிவரி,பேடிஎம்,மெட்ப்ளஸ் மற்றும் மாமா எர்த் உள்பட 23 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓவில் களமிறங்கி வெற்றிக்கரமாக நிதியை திரட்டி விட்டன. புதுமை, புரட்சி, செல்வம் பெருக்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஐபிஓவில் களம் இறங்கின. ஆனால், இந்த 23 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மட்டுமே தற்போது பட்டியலிடப்பட்ட விலையை காட்டிலும் அதிக விலைக்கு வர்த்தமாகி வருகிறது. இந்த நிறுவனங்கள் சராசரியாக 69 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளன. அதேசமயம், இதே காலத்தில் மிட்கேப் இன்டெக்ஸ் 78 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. லாபம் அளித்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகபட்சமாக, ஜாகிள் பங்கு தற்போது அதன் பட்டியலிடப்பட்ட விலையை காட்டிலும் 163 சதவீதம் கூடுதல் விலையில் வர்த்தமாகி வருகிறது.

16 நிறுவனங்களின் பங்குகள் அவற்றின் பட்டியலிடப்பட்ட விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு வர்த்தமாகி வருகிறது. அதாவது இந்த நிறுவனங்களின் ஐபிஓக்களில் முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக ஐடியாபோர்ஜ் நிறுவன பங்கு தற்போ அதன் பட்டியலிடப்பட்ட விலையை காட்டிலும் 67 சதவீதம் குறைவான விலையில் வர்த்தகமாகி வருகிறது.
முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இசிமைடிரிப், ஸோமாடோ, பாலிசி பஜார், ரேட்கெயின், சாக்கிள், கோ டிஜிட், ஐஎக்ஸ்ஐஜிஓ
முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்த பங்குகள் நைகா, பினோ, லேடென்ட் வியூ, பேடிஎம், மெட்பிளஸ், டெலிவரி, டிராக்சன், ஐடியாபோர்ஜ், யாத்ரா, மாமா எர்த், ஒலா எலக்ட்ரிக், பர்ஸ்ட் கிரை, சுவிக்கி, மொபிக்விக், கார்டிரேடு.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஐபிஓக்கள் வெற்றி பெறும்போது, அதில் முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள் என்ற கேள்விக்கு 3 காரணங்கள் பதிலாக உள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது அதிக வருவாயை முன்னிலைப்படுத்தி ஐபிஓவை மேற்கொள்கின்றனர். அதேசமயம் அந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் லாபத்தை எட்டுவதற்கான உறுதியான பாதை இல்லை. இதனால் சந்தை அந்த நிறுவனங்களின் மதிப்பை சரிவடைய செய்கிறது.
நிதி தொழில்நுட்பம்,கிக் பணி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பு இன்னும் பின்தங்கியே உள்ளது. இதுவும் பங்குகளின் ஏற்ற இறக்கத்துக்கு கூடுதல் காரணமாக உள்ளது. பொதுவாக அதிக ஆபத்துள்ள மற்றும் லாபமற்ற வணிகங்களை நிலைபப்டுத்த நேரமும், பணமும் தேவை. ஆனால் இந்திய முதலீட்டாளர்களிடம் அது இல்லை. ஏதாவது ஒரு யூக செய்தி வந்தால் அது பங்கின் விலையில் பெரிய ஏற்ற இறக்கத்தை வெளிப்படுத்தும்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications