மாருதி சுசூகி நிறுவனத்தின் Kizashi கார் உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்? ஆட்டோமொபைல் துறையில் ஊறிப்போனவர்களுக்கும், கார் மீதான ஆர்வம் அதிகம் கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
மாருதி சுசூகி இந்தியாவிலேயே அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் இந்த ஒரு காரை அறிமுகம் செய்து தனது வரலாற்றில் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு, தனது வரலாற்றில் கருப்பு பக்கமாக மாற்றியது.

இந்தியாவில் செடான் கார்களும், டீசல் கார்களும் கொடிக்கட்டி பறந்த காலம் 2011- 2015. இந்த காலக்கட்டத்தில் சந்தை போக்கிற்கு முற்றிலும் மாற்றப்பட்ட வகையில் மாருதி சுசூகி அறிமுகம் செய்த கார் தான் Kizashi. பிப்ரவரி 2, 2011ல் இந்தியாவில் Kizashi கார் அறிமுகம் செய்யப்பட்டது.
பொதுவாக மாருதி சுசூகி இந்தியாவிலேயே கார்களை தயாரித்து அல்லது அசம்பிள் செய்து விற்பனை செய்யும் காலத்தில் வெளிநாட்டில் முழுமையாக செய்யப்பட்ட கார் Kizashi. இந்த கார் Completely Built Unit ஆக இறக்குமதி செய்யப்பட்டதால் 105 சதவீதம் வரி எதிர்கொண்டது. இது மட்டுமா Kizashi பெட்ரோல் வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது (டீசல் கார்களுக்கு அதிகப்படியான மவுசு இருந்த காலம்).
இதனால் Kizashi கார் அப்போசதே 16 - 17.5 லட்சம் ரூபாய் விலை கொண்டு இருந்தது, இந்திய சந்தை பட்ஜெட் கார்களுக்கானது என்பதால் Kizashi விற்பனை மிகவும் மோசமாக இருந்த நிலையில், வெறும் 4 வருடத்தில் திரும்ப பெற்றது. இதன் பின்பு மாருதி சுசூகி இதுவரையில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு கார்-ஐ கூட அறிமுகம் செய்யவில்லை.
இந்த நிலையில் மாருதி சுசூகி சமீபத்தில் டோயோட்டா உடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் வாயிலாக அடுத்தடுத்து ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல் இரு நிறுவனங்களும் தங்களுடைய கார் மாடல்களை பகிர்ந்து வருகிறது. இதன் வாயிலாக மாருதி கிரான்ட் விட்டாரா, டோயோட்டா HYRYDER அறிமுகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மாருதி சுசூகி Invicto என்ற பெயரில் Toyota Innova Hycross மாடலை ரீடைசன் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார் தற்போது Ertiga மற்றும் XL6-க்கு மாற்றாகவும், MPV பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தை அடைய வேண்டும் என்பதற்காக புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மாருதி சுசூகி Invicto காருக்கான புக்கிங் ஜூன் 19 ஆம் தேதி துவங்கும் வேளையில், ஜூலை 5ஆம் தேதி தான் அதன் விலை அறிமுகம் வெளியிட உள்ளது. சந்தை கணிப்புகள் படி இந்த கார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணக்கிடப்படுகிறது.
மாருதி சுசூகி நிறுவனம் Kizashi கார் தோல்விக்கு பின்பு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கார்-ஐ அறிமுகம் செய்யாத நிலையில், Invicto கார் 12வது பப்ளிக் தேர்வு எழுதுவது போல் உள்ளது. இதன் விலை தான் Invicto காரின் தலையெழுத்தை மாற்றும், இதேவேளையில் இந்தியாவில் ப்ரீமியம் கார்களுக்கான வர்த்தகம் அதிகரித்துள்ளது சாதகமாக அமைந்தாலும், மாருதி சுசூகி Invicto காருக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுக்க முடியுமா என்பது மக்கள் கையில் தான் உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications