அமெரிக்காவின் கடுமையான கட்டுப்பாடுகள், தடைகளுக்கு மத்தியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை ஜனவரி மாதத்திற்கான ரஷ்ய கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்கியுள்ளது. இந்த செய்தி இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல் அமெரிக்காவுக்கும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களான ரோஸ்னெஃப், லுகாயில், Surgutneftegaz, Gazprom Neft ஆகியவை அமெரிக்காவால் வர்த்தகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்பான வர்த்தகத்தில் இந்திய வங்கிகளும், இந்திய ரிஃபைனர்களும் கூடுதல் கவனம் செலுத்தி வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஷ்யாவின் 4 பெரிய எண்ணெய் நிறுவனங்களும் தடை செய்யப்பட்டு உள்ளதால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வாய்ப்பு உள்ளது. ரஷ்யா இதுவரை இந்தியாவின் டாப் கச்சா எண்ணெய் சப்ளையராக இருந்தது வரும் வேளையில் இந்த தடையால் இப்போது சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகள் மீண்டும் முதல் இடத்தைப் பெறலாம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகளை குறைப்பதில் உறுதியாக இருக்கும் காரணத்தால், அமெரிக்காவுடன் எரிவாயு தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வேளையில், ரஷ்ய கச்சா கச்சா எண்ணெய் வாங்குவதற்கான மாற்று வழியை கண்டுப்பிடித்துள்ளது இந்தியா.
அமெரிக்கா தடை செய்யப்படாத ரஷ்ய நிறுவனங்கள் உடனும், புதிய வணிக நிறுவனங்கள் மூலம் இந்தியா ஜனவரி மாதத்திற்கான ரஷ்ய கச்சா எண்ணெய் பேரல்களை வாங்கியுள்ளது. இவை பிரென்ட் விலையைவிட ஒரு பேரலுக்கு 5 டாலர் தள்ளுபடியில் கிடைத்துள்ளன. ஒரு மாதத்துக்கு முன்பு 3 டாலர் தள்ளுபடி மட்டுமே இருந்தது.
இந்த தள்ளுபடி மற்றும் ஏற்றுமதி செலவுகளை கழித்தால் ரஷ்யா விற்பனை செய்யும் ஒரு பேரல் கச்சா எண்ணெய்-க்கு 40-45 டாலர் வருமானம் கிடைக்கும். இதற்கான பணம் ஐக்கிய அரபு அமீரகம் திர்ஹாம் மற்றும் அமெரிக்க டாலரில் செலுத்தப்படுகிறது என எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த சில வாரங்களாக தடை செய்யப்படாத ரஷ்ய எண்ணெயை வாங்கி வருகிறது, டிசம்பர் இறக்குமதிகளையும் பெற்றுள்ளது. ஆனால் BPCL ரஷ்ய கச்சா எண்ணெய்யை டிசம்பர் மாதம் வாங்கவில்லை. இந்த வர்த்தக மாடல் வெற்றி அடைந்தால் தொடர்ந்து இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்-ஐ வாங்கும்.
டிரம்ப் நிர்வாகம் இந்தியாவின் ரஷ்ய வர்த்தகத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வரும் வேளையில், கச்சா எண்ணெய் இறக்குமதி இதில் முக்கிய சிக்கலாக உள்ளது.


Click it and Unblock the Notifications