பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து 18,480 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளன.
ஏன்? எதனால் இவ்வளவு இழப்பு? என்ன தான் காரணம்? வாருங்கள் பார்க்கலாம்
பங்கு சந்தைக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சில்லறை எண்ணெய் விற்பனையாளர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சர்வதேச சந்தையில் விலை அதிகரித்த போது கூட விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அவர்களின் மார்ஜினில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மார்ஜினில் தாக்கம்
மத்திய அரசின் இந்த முடிவால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் பெரியளவில் பாதிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் மட்டும் அல்ல, கேஸ் விலையும் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு இழப்பு தெரியுமா?
விலையில் மாற்றமில்லாவிட்டாலும் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் பெரும் இழப்பினை கண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 1995.3 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் 10,196.94 கோடி ரூபாய் நஷ்டத்தினையும், பாரத் பெட்ரோலியம் 6290.8 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது.
பெரும் இழப்பு
ஆக மொத்தம் மேற்கண்ட நிறுவனங்கள் 18,480.27 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளன. இந்த இழப்பானது இதுவரை கண்டிராத அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் பெரும் இழப்பினை கண்டாலும், அரசு இதன் மூலம் பணவீக்கத்தினை பெரியளவில் கட்டுப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
பணவீக்கத்திற்கு இது தான் காரணம்
தற்போது பணவீக்கம் 7% என்ற லெவலில் இருக்க இதுவும் முக்கிய காரணம் எனலாம். இந்தியா இறக்குமதி சராசரியாக பேரலுக்கு 109 டாலராக இருந்தது. இது சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் சுமார் 85 - 86 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆக இதன் காரணமாக அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனங்கள் பெரும் இழப்பினை கண்டுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications