நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நான்கு ஆண்டுகளில் வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியடைந்ததே இதற்கு முக்கிய காரணம் என்றும், அதோடு தொடர்ந்து சரக்கு இருப்புகளை இழந்தது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங், கொரோனாவின் தாக்கத்தினால் கச்சா எண்ணெய் விலையானது படு வீழ்ச்சி கண்டது. இந்த உலகளாவிய சரிவானது ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மிக பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே நிறுவனம் 45 நாட்கள் சரக்குகளையும் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விலை குறையும் போது, எரிபொருளாக பதப்படுத்தப்படும் நேரத்தில் எண்ணெய் விலை குறையும் போது சரக்கு இழப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த மார்ச் காலாண்டில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 65.6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் இதன் நிதித் தலைவர் சந்தீப் குமார் குப்தா ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் 146.92 பில்லியன் ரூபாய் சரக்குகளை இழப்பினை சந்தித்துள்ளது.
இது கடந்த ஆண்டு 26.55 பில்லியன் ரூபாய் லாபத்தினை சந்தித்துள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் நான்காம் காலாண்டில் நிகர இழப்பு 51.85 பில்லியன் ரூபாயாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பாக 60.99 பில்லியன் ரூபாயாக இருந்தது.
கடந்த மார்ச் காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மொத்த சுத்திகரிப்பு விளிம்பு, கச்சா எண்ணெய் பதப்படுத்தப்பட்ட்ட விலை மற்றும் சுத்திரிக்கரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை விலை ஆகியவற்றுக்கு இடையேயான விற்பனை விலை வேறுபாடு, தற்போது மைனஸ் 9.64 டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 4.09 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில் எரிபொருள் தேவையும் குறைந்துள்ளது. எனினும் இனி எரிபொருள் தேவையானது லாக்டவுனுக்கு முன்பு இருந்தது போலவே ஆக இன்னும் கொஞ்ச காலம் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் கச்சா எண்ணெய் நுகர்வு முன்பை போல் இருக்குமா என்பதும் சந்தேகம் தான்.
இதோடு தற்போது லாக்டவுனில் இருந்து சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்தும் சரி, தனியார் போக்குவரத்தும் சரி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தனியார் இருசக்கர வாகனங்களும் கார்களும் மாவட்டத்திற்கு சென்று கொள்ளலாம், மண்டவாரியாக செல்ல முடியாது என்றும், அவசர தேவைக்கு செல்ல வேண்டுமெனில் இ-பாஸ் கட்டாயம் என்றும் கூறியுள்ளது. ஆக நிச்சயம் கச்சா எண்ணெய் தேவையானது தொடர்ந்து குறைந்தே காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications