அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதிலும் பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு முன்னதாகவே சலுகைகளைப் பெறலாம். இந்த விற்பனை ஐபோன்கள் உட்பட உயர்நிலை ஸ்மார்ட்போன்களுக்கு சில சிறந்த சலுகைகளைக் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், அமேசான் ஐபோன் 13-இன் விற்பனை விலையை வெளியிட்டது.
விற்பனையின் போது, ஐபோன் 13 ரூ.12,000 தள்ளுபடியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் ஐபோன் 13-ஐ 49,900 ரூபாயிலிருந்து 37,999 ரூபாய்க்கு பெறலாம். இந்தத் தள்ளுபடியினால் இதுவரை கண்டிராத குறைந்த விலையில் ஐபோன் 13-ஐ வாங்கிக் கொள்ளலாம். ஐபோன் 16 வெளியீட்டிற்கு முன்பே பிற ஐபோன் மாடல்களில் விலைக் குறைப்பை வெளியிட்டன.

ஐபோன் 13: தற்போது ஐபோன் 13 ரூ.38,000-க்கு விற்கப்படுகிறது. இந்தத் தள்ளுபடி குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்குகிறது. நீங்கள் மிகவும் குறைந்த விலையில் உயர்தர ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஐபோன் 13 மாடல் A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. அன்றாட பணிகள், கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்ற வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். இது சமீபத்திய மாடலுக்கான அதிக விலையை ஒப்பிடுகையில்.. குறைந்த விலையிலான உயர்தர ஐபோனை தேடுபவர்களுக்கு சிறந்த விருப்பமாக உள்ளது.
சாப்ட்வேர் அப்டேட்கள்: ஆப்பிள் அதன் சாதனங்களுக்கு நீண்ட கால சாப்ட்வேர் சப்போர்ட்டை வழங்குகிறது. இதன் மூலம் சமீபத்திய அம்சங்கள், பாதுகாப்பு புதுப்பிப்புகள் போன்றவற்றை பயணர்கள் பெறுவதை உறுதி செய்கிறது. உதாரணமாக ios 18-ஐ பதிவிறக்கம் செய்து அதன் சமீபத்திய அம்சங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே புதிய மாடல்கள் சந்தையில் கிடைத்தாலும் ஐபோன் 13 இன்னும் சில பயனர்களுக்கு ஏற்றதாகவே இருக்கும்.
சிறந்த கேமரா அமைப்பு: நைட் மோட், ஸ்மார்ட் எச்டிஆர் 4 மற்றும் ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைல்கள் போன்ற இரட்டை கேமரா அமைப்பு, உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகிறது. புதிய மாடல்கள் கூடுதல் கேமரா அம்சங்களைக் கொண்டிருந்தாலும், ஐபோன் 13-இன் கேமராவும் சிறந்த ஒன்றாகவே உள்ளது.
ஐபோன் 16-இன் வெளியீடு ஐபோன் 13-ஐ கொஞ்சம் தேதியிட்டதாக ஆக்குகிறது. 2021-ஆம் ஆண்டு ஐபோன் 16 வெளியானதிலிருந்து, ஆப்பிள் மேலும் 3 ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஐபோன் 16 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய மாடலை வாங்கினால், புதிய மாடலுடன் ஒப்பிடும்போது குறைந்த வருட மென்பொருள் புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள்.
ஐபோன் 13 தற்போது விலை குறைந்து கிடைக்கிறது. இன்னும் புதிய அம்சங்களைப் பெற வேண்டும், ஐபோன் 13-ஐ விட அதிகமான விஷயங்கள் அதில் இருக்க வேண்டும் என்று கருதுவோர் வேறு மாடல்களை பார்வையிடலாம். அதுவே விலை குறைவாக உயர் ரக ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தள்ளுபடி உதவிகரமானதாக இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications