ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய மாடல்களை அறிவிக்க வேண்டாம் எனப் பல முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ள நிலையில் தற்போது சந்தையில் இருக்கும் மாடல் போன்களின் இருப்பைக் குறைக்கும் விதமாக அதிகத் தள்ளுபடி கொடுத்து ஸ்டாக்-ஐ தீர்க்க முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முதல் சாம்சங், சியோமி வரையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்த முடிவில் தான் உள்ளது, இத்தகைய நிலையில் ஸ்மார்ட்போன்களின் அரசனாக விளங்கும் ஆப்பிள் தனது சமீபத்திய வெளியீடான ஐபோன் 14-ஐ அதிகப்படியான தள்ளுபடியில் அளிக்க உள்ளது.
அதிலும் முக்கியமாக ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்-ல் ஐபோன்14 வெறும் 45,000 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன்
2023 ஆம் ஆண்டில் புதிய போன் உடன் துவங்க ஆர்வமாக இருக்கும் பலருக்குப் பிளிப்கார்ட் தளத்தில் அளிக்கப்படும் ஆஃபர் கவர்ச்சிகரமாக உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்14-ஐ 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது, இதன் விலை 79,900 ரூபாய்.
ஐபோன் 14
பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14-க்கு எவ்விதமான நிபந்தனையும் இல்லாமல் நேரடியாக 5,910 ரூபாய் அளவிலான ஆஃபரை அளிக்கிறது, இதுமட்டும் அல்லாமல் ஐபோன் 14 128ஜிபி வேரியன்ட்-க்கு டிரேட் இன் ஆஃபர் மூலம் 23000 ரூபாய் வரையில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது, இந்த ஆஃபர் பெற உங்களுடைய பழைய போனை கொடுத்துவிட்டு புதிய ஐபோன்14 வாங்கிக்கொள்ள முடியும்.
23000 ரூபாய் தள்ளுபடி
இதேவேளையில் அனைத்து போன்களுக்கும் 23000 ரூபாய் தள்ளுபடி கிடைக்காது, ஒவ்வொரு போனுக்கும் அதைப் பயன்படுத்திய காலம், போனின் தரம் அதாவது ஸ்கிராச் ஆகியுள்ளதா, அடிப்பட்டு உள்ளதா என 10க்கும் அதிகமான புள்ளி விபரங்கள் அடிப்படையில் உங்கள் பழைய போனுக்கான மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான தள்ளுபடி வழங்கப்படும்.
வெறும் 45000 ரூபாய்
இதைத் தாண்டி வங்கி கிரெடிட் கார்டு ஆஃபர் ஆகியவையற்றை பயன்படுத்தி 5000 ரூபாய் வரையிலான தள்ளுபடி பெற முடியும், அவை அனைத்தையும் முழுமையாகப் பெற்றால் மட்டுமே நீங்கள் ஐபோன் 14 128ஜிபி ஸ்மார்ட்போனை 45000 ரூபாய்க்கு வாங்க முடியும்.
விளம்பரம்
பிளிப்கார்ட் தளத்தில் செய்யப்படும் விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தாலும் உண்மையில் அது அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லை, பழைய போன்களுக்கு 23000 ரூபாய் தள்ளுபடி பெற வேண்டும் என்றால் நீங்கள் ஐபோன்13 256 ஜிபி போனை தான் அளிக்க வேண்டியிருக்கும், அதிலும் எவ்விதமான ஸ்கிராச், டேமேஜ் இருக்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான கண்டிஷன்.
வாய்ப்புகள் குறைவு
இந்த நிலையில் நீங்கள் புதிய ஐபோன் 14-ஐ 45000 ரூபாய்க்கு வாங்க முடியுமா என்பதை யோசித்துக்கொள்ளுங்கள், ஆனால் இந்தத் தள்ளுபடியைப் பெற முடியாது என்பது இல்லை, வாய்ப்புகள் குறைவு என்பது தான் உண்மை.
ஐபோன் 15
ஆப்பிள் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் புதிய ஐபோன் 15-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது சந்தை கணிப்பின் படி ஐபோன் 14-ஐ காட்டிலும் ஐபோன் 15 விலை குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications