உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் போன்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையிலும் இதற்கு மக்கள் மத்தியில் மவுசு குறையவில்லை.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஐபோன் விற்பனைக்கு வரும் நாள் எப்போதும் தீபாவளி தான், அனைத்து ஆப்பிள் ஸ்டோர்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். சில வருடங்களுக்கு முன்பு வரையில் ஐபோன் விற்பனைக்கு வரும் நாளன்று பெரும் கூட்டம் ஆப்பிள் ஸ்டோர் வெளியே 2 நாட்கள் வரையில் காத்திருக்கும் நிலை இருந்தது.

ஆனால் ஆப்பிள் தனது சப்ளையை அதிகரித்து மக்களுக்கு வேகமாக விற்பனை செய்ய துவங்கிய பின்பு மக்கள் காத்திருக்கும் நேரம் பெரிய அளவில் குறைந்தது. ஆனால் இந்தியாவில் சமீபத்தில் தான் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த டிரெண்ட் இந்தியாவிலும் தொத்திக்கொண்டது.
ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு அடுத்த 15 நாளில் டெலிவரி செய்யப்படும் வேளையில் முதல் நாளே ஐபோன் பெற வேண்டும் என திட்டமிடும் மக்கள் இந்த முறை பல மணிநேரம் காத்திருந்து வாங்க துவங்கினர்.
இப்படி மும்பையில் பிரபலமான BKC வளாகத்தில் திறக்கப்பட்டு உள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில் அகமதாபாத்-ஐ சேர்ந்த ஒருவர் மதியம் 3 மணியில் இருந்து காத்திருந்து முதல் ஐபோனை வாங்கியுள்ளார். இதேபோல் பெங்களூரில் இருந்து ஒருவர் மும்பைக்கு வந்து ஐபோன் 15ப்ரோ வாங்கியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆப்பிள் ஸ்டோர்களிலும் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பல நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர், ஐபோன் கிரேஸ் புரிந்துக்கொள்ள முடிகிறது, நல்ல போன் தான். ஆனா இது வெறும் போன் தான், இவ்வளவு நேரம் காத்திருந்து வாங்கும் அளவுக்கு வொர்த் இல்லை என தெரிவித்துள்ளனர்.

80000 முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் பணம் கொடுத்து மக்கள் ஐபோன் வாங்க காத்திருப்பதை பார்க்கும் போது மக்களின் purchasing power அதிகரித்துள்ளதா என விகாஸ் என்பவர் கேட்டுள்ளார்.
இதே வேளையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆஃப்லைன் ஸ்டோர் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,825 முதல் ரூ.2,490 வரையில் சம்பளம் கொடுப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரீடைல் விற்பனை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுகளைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பள குறைப்பு சர்வதேச அளவில் அனைத்து ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களையும் பாதிப்படைய செய்கிறது.


Click it and Unblock the Notifications