என்னதான் நியூ மாடல் போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஆப்பிள் போன்களுக்கு என்று தனி பேன்பேஸ் உள்ளது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 மாடலை அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து அதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு மாடல்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பலர் பலனடைந்தனர். அதோடு பிக் பில்லியன் டேஸ், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் போன்ற சிறப்பு விற்பனையைப் பயன்படுத்தியும் முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் ஐபோன் விற்பனையை அதிகரித்தன.
தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் ஐபோன் 15 மாடலை விலை குறைவாக வழங்கி வருகிறது. ரூ.29,499-க்கே ஐபோன் 15 மாடலை வாங்கலாம். செப்டம்பர் 2023-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 மாடல், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

முதல் முதலாக இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பல்வேறு விலை குறைப்புகளை இந்த மாடலுக்கு வழங்கியுள்ளனர். ஐபோன் 15 புதிதாக வெளியிடப்பட்ட நேரத்தில் 128 ஜிபி மாடல் விலை 79,990-க்கு விற்கப்பட்டது. அதே நேரம் 256 ஜிபி மாடல் ரூ.89,990 விற்பனை செய்யப்பட்டது. 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.1,09,990-க்கு விற்பனை செய்தனர்.
தற்போது ஐபோன் 15-இன், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.60,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு 5 சதவீத கேஷ்பேக் மற்றும் 10 சதவீத வங்கி சலுகைகளும் கிடைக்கிறது. இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் பிளிப்கார்ட் நிறுவனம் இந்த போனை பெற ரூ. 58,700 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் வழங்குகிறது. இந்த ஆஃபருக்கு பிறகு போனின் விலை ரூ.22,499 ரூபாயாக குறையும்.
ஆனால் எக்ஸ்சேஞ் ஆஃபரில் பழைய போனின் விலை அதன் கண்டிஷன் மற்றும் மாடல் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். ரூ. 58,700 வரை தள்ளுபடி கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஒருவேளை உங்களுடைய பழைய ஐபோன் 14 ப்ளஸ் மாடலை எக்ஸ்சேஞ்ச் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் அதன் விலை ரூ.31,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் 15 மாடலை வெறும் ரூ.21,499-க்கு வாங்கிக் கொள்ளலாம்.
ஐபோன் 15-இல் உள்ள சிறப்பு என்ன?: ஐபோன் 15 டைனமிக் ஐலேண்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதனால் மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவம் கிடைக்கும். 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்புகளும் கொண்டுள்ளது. இதில் 48 எம்பி முதன்மை கேமரா உள்ளது. 2x டெலிஃபோட்டோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. எனவே iPhone 15 பயனர்கள் 0.5x, 1x மற்றும் 2x போன்ற மோடுகளைப் பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்க முடியும். செல்ஃபி எடுக்க 12எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications