என்னதான் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி வந்தாலும் நம்மில் பலருக்கு ஐபோன் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் ஐபோன்களின் விலை அதிகமாக இருப்பதால் பட்ஜெட் காரணமாக பலரால் ஐபோன்களை வாங்க முடிவதில்லை. இதற்காக கவலை பட வேண்டாம். ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் அனைத்து மொபைல்களுக்கும் அதிக அளவிலான தள்ளுபடிகளை வழங்குகிறது.
பிளிப்கார்ட் Apple iPhone 15 மாடளுக்கான தள்ளுபடிகளை தனது Big Bachat Days விற்பனையில் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 15 சீரிஸ்-இன் நான்கு மாடல்களுக்கும் அதிகமான தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்த வரிசையில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அடங்கும்.

ஐபோன்களின் ஸ்டாண்டர்ட் மாடல் மற்றும் ஆப்பிள் ஐபோன் 15 மாடல்கள் பிளிப்கார்ட்டில் ரூ.79,990 விலையில் உள்ளது. Flipkart Big Bachat Days விற்பனையில் 18 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். இப்போது இதன் விலை ரூ. 64,999 ஆகக் குறையும். அதன் அசல் விலையை விட கிட்டத்தட்ட ரூ.15,000 குறைவு. இதில் பல்வேறு வங்கிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது சலுகைகளைப் பெறலாம்.
ஆப்பிள் ஐபோன் 15 அம்சங்கள்: கடந்த வருடம் செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15, ஒரு 5G மொபைல், 60 ஹெர்ட்ஸ் (60 HZ) ரெப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டியுடன், 6.10 இன்ச் OLED டிஸ்பிலேவைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் A16 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் ஹெக்ஸா கோர், 6 ப்ராஸ்ஸஸ்ர் கோர் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் 6ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஐபோன் 15 மாடலில் வயர்லெஸ் (wireless) சார்ஜிங் வசதியையும் வழங்குகின்றனர். இதில் ட்ரிபிள் கேமரா வசதி உள்ளது , 64 mp +12 mp ரியல் கேமரா மற்றும் 12 mp செலஃபி கேமரா உள்ளது. இந்த மொபைல் சந்தையில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. முக்கியமாக 1 வருடம் 6 மாதம் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் அனைத்து மாடல்களுக்கும் இந்த அம்சங்கள் பெரும்பாலும் ஒத்துபோகும்.


Click it and Unblock the Notifications