ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஆன்லைனில் குறைந்த விலையில் தற்போது ஐபோன் 15 ப்ரோ கிடைக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையதளத்தில் அதிகப்படியான தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த இ-காமெர்ஸ் இணையதளமும் வழங்காத மிகக் குறைந்த விலையில் ஐபோன் 15 ப்ரோவை ரிலையன்ஸ் டிஜிட்டல் இணையதளம் வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் பண்டிகை கால விற்பனையின் போதும் ஐபோன் 15 ப்ரோ மாடலுக்கு நிறைய தள்ளுபடிகள் பிளிப்கார்ட மற்றும் அமேசானில் வழங்கப்பட்டது.
இதைப் பயன்படுத்தி பல ஐபோன் பிரியர்கள் பலனடைந்தனர். ஐபோன் 16 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பிற ஓல்ட் மாடல் ஃபோன்களுக்கான தள்ளுபடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

ஐபோன் 15 ப்ரோ விலை: ஐபோன் 15 ப்ரோ மாடலை ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.99,900-க்கு பெறலாம். இது ஒரு பெரிய சலுகையாகும். ஐபோன் 15 ப்ரோ மாடல் இந்தியாவில் ரூ.1,34,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்த மாடல் ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.99,900-க்கு கிடைக்கிறது. எந்த வித விதிமுறைகளும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் ரூ.35,099 வரை தள்ளுபடி பெறலாம்.
மேலும் இந்த ப்ரோ மாடலுக்கு 10,000 ரூபாய் வரை கிரெடிட் கார்டு தள்ளுபடியையும் பெறலாம். இதனால் விலை மேலும் 10,000 குறைந்து 89,900-ஆகக் குறையும். ப்ரோ பதிப்பை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சலுகையாகும். மேலும் ப்ரோ மாடல்களுக்கு இந்த அளவிற்கான தள்ளுபடிகள் அரிதாகவே வழங்கப்படுகிறது. அதோடு ரிலையன்ஸ் டிஜிட்டல் ஐடிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகள், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கும் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. இந்த 2 கிரெடிட் கார்டு மட்டுமின்றி பிற வங்கிகளின் கார்டுகளுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
ஐபோன் 16 ப்ரோ மாடல் இந்தியாவில் 1,19,900 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஐபோன் 15 ப்ரோவிலும் மேம்படுத்தப்பட்ட கேமரா, பவர்ஃபுல் சிப் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 15 ஆனது ப்ரோ மோஷன் (ProMotion) தொழில்நுட்பத்துடன் கூடிய 6.10-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz வரை புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. எனவே கேமிங், தினசரி பயன்பாடு என அனைத்திற்கும் ஐபோன் 15 ப்ரோ மாடல் ஏற்றது.
ஐபோன் 16 ப்ரோ மாடல் வெளியாகியிருந்தாலும் இன்னமும் பல பயனர்கள் ஐபோன் 15 ப்ரோ மாடலை விரும்புகின்றனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சாப்ட்வேர் அப்டேட்களை பெரும் ஐபோன் ப்ரோ பல பயனர்களுக்கு தங்கள் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.
A16 பயோனிக் சிப் பொருத்தப்பட்ட, ஐபோன் 15 ப்ரோ சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இது மிகவும் தேவைப்படும் பணிகளைக் கூட எளிதாகக் கையாளும் திறன் கொண்டது. பின்புற கேமரா அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது, புதிய 48MP கேமரா, புகைப்படம் மற்றும் வீடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதனால் குறைந்த வெளிச்சத்திலும் போட்டோக்களை எடுக்க முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications