2025ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம், புதிய வருடத்தை புதிய ஸ்மார்டபோன் உடன் துவங்க வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கும், இவர்களை குறிவைத்து பல பிராண்டுகள் தற்போது ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் விற்க துவங்கியுள்ளது. இதில் முக்கியமாக டாடா குழுமத்தின் ரீடைல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவான க்ரோமா நிறுவனம் மிகப்பெரிய சலுகை உடன் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
டிசம்பர் 15 முதல் ஜனவரி 4, 2026 வரை நடக்கும் க்ரோம்டாஸ்டிக் டிசம்பர் சேல் நாடு முழுவதும் க்ரோமா கடைகளில் நடக்கிறது. இந்த அதிரடி விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. வங்கி கேஷ்பேக், பழைய போன் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சேர்த்து இதன் விலையில் பெரிய சரிவு ஏற்பட்டு உள்ளது.

ஐபோன் 15 சலுகை
க்ரோமா-வின் இந்த சிறப்பு விற்பனையில் கடையில் ரூ.56,490க்கு விற்பனையாகும் ஐபோன் 15 இந்த தள்ளுபடி விற்பனையில் பல்வேறு சலுகைகள் சேர்த்து ரூ.36,490 விற்கப்பட உள்ளது. இந்த விலை எப்படி குறைகிறது என்பதை தெரிந்துக்கொண்டு, இச்சலுகை உங்களுக்கு கிடைக்குமான என்பதை தெரிந்துக்கொண்டு வாங்குவதற்கான முடிவை எடுக்கவும்.
சில முக்கிய வங்கி கார்டுகளை வைத்திருந்து, அதன் மூலம் வாங்கும் போது உங்களுக்கு ரூ.2,000 கேஷ்பேக் கிடைக்கும். இதேபோல் பழைய போன் எக்ஸ்சேஞ்சுக்கு ரூ.14,000 வரை தள்ளுபடி கிடைக்கும், கூடுதல் போனஸ் ரூ.4,000 வரை கிடைக்க உள்ளது. இப்படி அனைத்தும் சேர்தால் மட்டுமே ரூ.36,490 தொகைக்கு விற்கப்படம். இது ஆண்ட்ராய்டு அல்லது பழைய ஆப்பிள் போனில் இருந்து மாறுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இரு்ககும்.
ஐபோன் 16 தள்ளுபடி
புதிய ஐபோன் 16 கடையில் ரூ.65,990க்கு விற்கப்பட்டு வருகிறது, ஆனால் க்ரோமாவின் சிறப்பு விற்பனையில் பல்வேறு சலுகைகள் சேர்த்து வெறும் ரூ.40,990 தொகைக்கு விற்க உள்ளது. ஐபோன் 15க்கு அளிப்பது போலவே வங்கி கார்டுக்கு ரூ.3,000 கேஷ்பேக், பழைய போன் எக்ஸ்சேஞ்சுக்கு ரூ.16,000 வரை மதிப்பு, கூடுதல் போனஸ் ரூ.6,000 வரை கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 16 ரூ.40,990 அளவிற்கு கொடுக்கப்பட உள்ளது.
சிறப்பு விற்பனை காலம்
க்ரோம்டாஸ்டிக் டிசம்பர் சேல் ஜனவரி தொடக்கம் வரை நடக்கிறது. ஐபோன் 15, 16 போன்றவற்றை வாங்குவோருக்கு இந்த சலுகை காலத்தில் வாங்கினால் நீண்டகால முதலீடாக அமையும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications